தொலைக்காட்சி!!

Search This Blog

Friday, March 31, 2017

35 வயது ஆகியும் இன்னும் திருமணம் ஆகவில்லையா? அப்ப இதெல்லாம் நடக்கலாம் பாத்துக்கோங்க!

35 வயது ஆகியும் திருமணம் ஆகாமல் ஆண்கள் பெண்கள் என இருவருமே உள்ளனர். இன்றைய காலக்கட்டத்தில் பெண்கள் பலர் ஆண்களைப் போல தாமதமாக திருமணம் செய்வதையே விரும்புகின்றனர்.
ஏனெனில் இந்த காலத்துப் நாகரிக பெண்கள் படிப்பு மற்றும் வேலைக்குத் தான் முன்னுரிமை கொடுக்கின்றனர். அதில் வெற்றி பெற்றவர்கள் ஒருவரின் துணையை ஏற்க மறுக்கின்றனர்.
இவ்வாறான வாழ்க்கை நகர்புற பெண்களையே வெகுவாக பாதிக்கின்றது, நகர்புற வாழ்க்கை முறை ஒரு மனிதரின் வாழ்க்கை முற்றிலும் மாற்றி தனித்து வாழும் நிலைமையை உண்டாக்குகிறது என்று ஒரு ஆய்வு முடிவு கூறுகின்றது.
ஆகவே இப்போது 35 வயது வரை திருமணமாகாமல் இருப்பதால் நேரக் கூடிய சில அதிர்ச்சி தரும் உண்மைகளைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
உண்மை 1
பெண்கள் ஆண்கள் என இருவரும் நினைப்பது எல்லா உறவுகளுக்கும் ஒரு வரம்பு என்று உள்ளது. அப்படி எந்த வரம்பும் இல்லாமல் தனியாக தங்கள் விருப்பத்துடன் 35 வயது வரை வாழ்ந்துவிட்டு அதன் பின் அனைவருக்கும் கட்டுப்பட்டு திருமணம் செய்து ஒரு வரம்புடன் வாழ வேண்டும் என்றால் அது சிரமமாக இருக்கும் என்று எண்ணுகிறார்கள் . எனவே, இது திருமணம் செய்துக் கொள்ளும் ஆசையை மறுத்து தனித்து வாழவே ஆசைப்படவைக்கிறது.
உண்மை 2
திருமணம் செய்து கொள்ளும் பொழுது ஆரம்பகாலத்தில் மகிழ்ச்சியாக தான் இருக்கும். அதுவே காலப்போக்கில் சுமையாக மாறலாம் என்று எண்ணுவதுண்டு. இதுவே நீங்கள் தனியாக இருந்தால் இவை எதுவும் இருக்காது. அதுவும் 35 வயது வரை தனியாக சந்தோஷமாக இருந்துவிட்டு இவை அனைத்தையும் யோசித்து பார்க்கும் போது திருமணம் செய்யாமல் இருப்பதே மேல் என்று தான் தோன்றும்.
உண்மை 3
ஏதேனும் ஒரு விடயத்தில் தனிமையாக செயல் பட நினைக்கும் பொழுது தனியாக இருந்தால் வாழ்க்கையை நீங்கள் நினைக்கும் படி மாற்றிக் கொள்ள முடியும். நினைத்த இடத்திற்குப் போகலாம், நினைத்த நேரத்தில் வேலை விடலாம் அல்லது மாற்றிக் கொள்ளலாம். இவை யாரையும் எந்த வகையிலும் பாதிக்காது.
உண்மை 4
நீங்கள் தனியாக இருந்தால் உங்கள் வேலையில் முழுவதுமாக கவனம் செலுத்த முடியும். தொழில் முன்னேற்றத்தில் அதிக அக்கறை செலுத்த முடியும். 35 வயதிற்குப் பிறகு இவை அனைத்தையும் தியாகம் செய்ய முடியுமா உங்களால்? இதுவும் ஒரு காரணம்.
உண்மை 5
ஒருவர் தன் வாழ்வில் தனியாகவே 35 வயது வரை வாழ்ந்து பழகிவிட்டார் என்றால் அவர் திருமணத்திற்கு பிறகு மனைவியின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதை கண்டிப்பாக விரும்பமாட்டார்கள். இது ஒரு முக்கிய காரணம் தனித்து வாழ்வதில்.
உண்மை 6
இன்பமாக 35 வயது வரை தனியாக வாழ்ந்துவிட்டால், உங்களால் மற்றவர்களைப் போல சாதாரண வாழ்க்கை வாழப்பிடிக்காது பொதுவாக. அதுவும் நீங்கள் பார்த்த கல்யாணமான தம்பதிகள் தினசரி சண்டை போடுபவர்களாகவும், சந்தோஷமான வாழ்க்கை வாழாமலும், ஏமாற்றங்களை சந்தித்தவர்களாகவும் இருப்பதை பார்த்திருந்தால் அது இன்னமும் கடினமாகிவிடும். பின்னர் திருமணத்தைப் பற்றி யோசிக்காமல் இருக்கவும் வாய்ப்புண்டு.
உண்மை 7
தனித்து வாழ்வதின் சிறப்பம்சம் என்பதே உங்கள் மனதிற்கு பிடித்தவருடன் நினைத்த நேரத்தில் இருக்கலாம். இது தான் நகர்புற பெண்கள் ஆண்களின் ஒரு மிக முக்கிய காரணமாக இருக்கிறது தனித்து வாழ்வதற்கு.
- See more at: http://www.manithan.com/news/20170331126071#sthash.qI92WOvA.dpuf

No comments:

Post a Comment