தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 2 மார்ச், 2017

குறட்டை...

நாள் முழுவதும் வேலை பார்த்து களைத்த மனிதன், வீட்டி ற்கு வந்து படுத்து தன்னை மறந்து தூங்கும் போது, அவனி டமிருந்து குறட்டை சத்தம் எழும்.
காலையில் குறட்டை பற்றி அவர்களிடம் கேட்டால் நான் குறட்டை விட்டேனா என்று கேட்பார்கள்.
குறட்டை என்பது சாதாரண விஷயம் அல்ல. அது உடலில் ஏற்படும் ஏதேனும் அசௌகரியத்தின் அடையாளமாகும்.
குறட்டை ஏன் வருகிறது?
ஒருவர் தூங்கும்போது அவரது மூச்சுப் பாதை பகுதியா கவோ அல்லது முழுவதுமாகவோ அடைத்துக் கொள்கி றது.அந்த நேரத்தில் வாய் வழியாக சுவாசிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இவ்வாறு வாய் வழியாக மூச்சுவிடும் போது உள்நாக்கு வேகமாக அசைந்து பேலர் மீது உரசுகி றது.
இந்த அதிர்வு சத்தத்தையே நாம் குறட்டை என்கிறோம், குறட்டை என்பது ஒரு நோய் இல்லையென்றாலும் இத னால் வரும் பக்கவிளைவுகள் மிகவும் அதிகம்.விளை வுகள்
தூங்கிக் கொண்டிருக்கும் போது இதய பாதிப்பு, ரத்த அழுத்தம், பக்கவாதம் போன்றவை ஏற்பட பெரும்பாலும் இதுவே காரணமாக அமைகிறது. அதிக உடல் எடை காரணமாக, வயிறு அல்லது கழுத்து அல்லது தொண் டைப் பகுதியில் அதிக கொழுப்பு சேர்ந்து விடும்.இத னால், நுரையீரலால் நாம் ஆக்ஸிஜனை உள்ளிருக்கும் போது தேவையான அளவுக்கு விரிவடைய இயலாமல் போகும். இது, மூச்சை உள்ளிழுப்பதிலும், வெளியேற்று வதிலும் சிக்கலை ஏற்படுத்துகிறது.
இந்த சமயங்களில், ஒருவரது ரத்தத்தில் ஆக்ஸிஜன் குறை ந்து, கார்பன் டை ஆக்ஸைட் அதிகரித்து உடல்நிலை பாதிக்கப்பட நேரிடுகிறது.
எனவே, குறட்டை தானே என்று எண்ணாமல், உடனடி யாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டி யது அவசியம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக