தினமும் இதை காலையில் வெறும் வயிற்றில் தவறாமல் குடித்து வந்தால், நமது உடலுக்கு தேவையான ஆரோக்கியம் கிடைக்கும்.
சூடான நீரில் எலுமிச்சை உப்பு கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
- எலுமிச்சை சாறு மற்றும் உப்பு கலந்த ஜூஸை குடித்தால், ஒற்றைத் தலைவலி பரந்து போய்விடும். இது உடலில் செரோடோனினை அதிகமாக்கி, உடல் வலி, எரிச்சல் மற்றும் வீக்கம் போன்ற பிரச்சனையை குறைக்க உதவுகிறது.
- உடலில் நீர் வறட்சி, மன அழுத்தம், மினரல்ஸ் மற்றும் விட்டமின் குறைபாடு போன்ற பிரச்சனை உள்ளவர்கள் இந்த ஜூஸை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், நல்ல பலன் கிடைக்கும்.
- எலுமிச்சையில் விட்டமின் C சத்து அதிகமாக நிறைந்துள்ளது. எனவே இந்த எலுமிச்சை ஜூஸை தினமும் குடிப்பதால், நமது உடம்பில் உடலில் நீர்வறட்சி ஏற்படுவதால் உடல் சோர்வு, மயக்கம் போன்ற பிரச்சனையை தடுக்கிறது.
- தினமும் காலை எலுமிச்சை நீரில் உப்பு கலந்து பருகுவதால் நாவில் உள்ள எச்சில் சுரப்பிகள் தூண்டிவிடப்படும். இதனால் அஜீரண கோளாறுகள் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.
- கார்டிசோல் மற்றும் அட்ரினலின் எனும் இந்த இரண்டு ஹார்மோன்களை உப்பு கட்டுப்படுத்தும் தன்மை கொண்டுள்ளது. எனவே எலுமிச்சை நீரில் உப்பு கலந்து குடிப்பதால், நரம்பு மண்டல பாதிப்பை தடுத்து, நல்ல உறக்கம் ஏற்படுத்துகிறது.
- எலுமிச்சை நீரில் இருக்கும் சத்துக்களும், உப்பில் இருக்கும் மினரல்ஸ்-ம் நமது உடலில் தேங்கியிருக்கும் நச்சுக்களை போக்கி, உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
- உப்பில் இருந்து கிடைக்கும் முறையான மினரல் சத்துக்கள் நமது உடம்பில் உள்ள இன்சுலின் அளவை சீராக்கி, நீரிழிவு நோய் வராமல் தடுக்கிறது.
- உப்பில் உள்ள எதிர்மறை அயனிகள், இதய துடிப்பை சீராக்கி, உடலில் எலக்ட்ரோ-கெமிக்கல் செயல்களுக்கு உறுதுணையாக இதயத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.
- இயற்கையாக ஹார்மோன் செயல்பாடுகளை ஊக்குவிக்கும் திறன் கொண்டது உப்பு. எனவே இது இயற்கை முறையில் ஆண், பெண் ஆகிய இருபாலரின் கருவளத்தின் ஆரோக்கியத்தை மேமப்டுத்துகிறது.
http://news.lankasri.com/health/03/121171?ref=lankasritop
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக