கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் நான் இப்போது கூற வருபவற்றை கொண்டு திட்ட வேண்டாம், கடவுள்களை பாதிக்கும் வகையில் இது இருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள், அவ்வாறு இருக்காது எனறே நம்புகின்றேன்.
புலன் புறத்தெரிவு அல்லது ஆறாம் அறிவு என்பது பெளதீக புலன் உணர்வின் ஊடாக தகவல் அறியப்படாது மனதினால் உணரப்படுதலைக் குறிக்கும்.
இது மனிதனை எவ்விதம் செயற்படுத்துகின்றது புலன்களுக்கு அப்பாற்பட்ட சக்தியாக இது காணப்படுவது எவ்வாறு மனிதனும் கடவுள் ஆகின்றான். கடவுளும் மனிதனா? என்ற ரீதியாகவும் சிந்திக்கத் தூண்டும் இந்த ஆய்வு.
புலன் புறத்தெரிவு அல்லது ஆறறிவு என்பதற்கான ஆங்கிலப் பதம் ஜே. பி. ரைன் எனும் உளவியலாளரால் உள்வாங்கப்பட்டது.
இவர் ஆறறிவு கொண்டவரின் திறமைகளான தொலை நுண்ணுணர்வு, புலன் கடந்த கேள்வி ஆற்றல், மனக்கண் தொலைக்காட்சி, மற்றும் அவர்களின் இம்மையூடான நடவடிக்கைகளான முன்னறிவு அல்லது முன்னறிவு ஆகியனவற்றைக் குறிக்கப்பயன்படுத்தினார்.
புலன் புறத்தெரிவு சிலவேளைகளில் ஆறாம் அறிவாகக் குறிக்கப்படுகின்றது. புலன் புறத்தெரிவு இயற்கை இயற்காட்சி அல்லது மேலதிக உணர் புலப்பாடு எனவும் அர்த்தப்படுகின்றது.
ஏதோ பாசை புரியாத மொழியைக் கேட்பது போல் இருக்கலாம் உண்மைதான் கூற வந்த எனக்கே புரியவைக்கப்போவது எவ்வாறு எனப் புரியவில்லை.... சரி தொடங்கிவிட்டேன் முடிந்தளவு விளக்கி வைக்கின்றேன் வாருங்கள்.
ESP (Extra Sensory Perception)
சாதாரண மனிதர்களுன் மூளையின் உணர்திறனுக்கு அப்பாற்பட்டவை இந்த ESP என அறியப்படுகின்றது. இந்த ESP சக்தியில்
- இறந்த காலத்தை சொல்பவர்கள்
- எதிர்காலத்தை சொல்பவர்கள்
- நிகழ்காலத்தில் நட்பபவற்றை சொல்பவர்கள்
- பெளதீக விதிகளை மீறி செய்கைகளை செய்து காட்டுபவர்கள்
இன்றும் பலவகை உள்ளது, அது அவரவர் மூளையையும் சதன் சக்தியையும்வெ ளிப்படுத்துவதனைப் பொறுத்து வகைப்படும்.
மூளைக்குச் செல்லும் இரத்த நரம்புகளில் சிறு மின்னதிர்வை ஏற்படுத்தி அந்த அதிர்வுகள் மூளையில் முன்னர் சேமிக்கப்பட்ட நினைவுகளை மீட்டுக்கொடுக்கின்றன.
இது நாம் யோசனை செய்யும் போது தலையை கைகளால் கசக்கிக் கொள்வது அல்லது நெற்றியின் பக்கத்தை தட்டுவது போன்ற செயற்பாடுகளை நாம் செய்வது இந்த வகையில் மின்னதிர்வினை ஏற்படுத்தும் செயல் முறையே.
சில எலிகளின் மூளையை பயன் படுத்தி இந்த மின்திர்வு செயற்பாட்டை ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்துள்ளனர்.
இதன் காரணமாக மூளையில் பல சக்திகள் பொதிந்துள்ளன என்ற உண்மை உணரப்பட்டது.
மூளையில் இருக்கின்றன 4 பில்லியன்ஸ் செல்கள் ஆனால், மனிதர்கள் அதில் 10% வீதம் கூட முழுதாக பயன்படுத்துவதில்லை என்பதே ஆச்சரியம் மிக்க உண்மை, கணித அறிவியளாலர்களுக்கும் படிக்காத மனிதனுக்கும் கூட 100 செல்களுக்குள் தான் வித்தியாசம்.
ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் 500 தொடக்கம் 1000 செல்களை படுத்திய காரணத்தால் அவர் அளப்பரிய கணித அறிவியளாலராக மாறினார் என்பதும் உண்மையே.
அமெரிக்காவில் மன்ஹட்டன் நகரத்தில் ஒரு ESP தொடர்பான ஆய்வுகூடம் பல விஞ்ஞானிகள் இணைந்து ஆழ்மனதின் ஆற்றல்கள் பற்றியும்… மூளையின் தன்மைகள் பற்றியும் கலந்துரையாடினார்கள்
அப்போது டாக்டர். ஷார்ல்ஸ் பேர்ட் கண்களை தியானத்தில் ஈடுபட்டுள்ளார் பின்னர் அவரது உடல் தானாக மேல் எழுந்து அவர்கள் கூடியிருந்த கட்டிடம் வழியாக சென்று அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளது.
பௌதீக விதிகளை மீறிய இந்த செயல் காரணமாகவே ஆழ்மனதின் ஆற்றலும் ESP எனப்படும் மூளையின் அதீத சக்தியின் மேல் நம்பகத்தன்மை வளர்ந்து ஆராய்ச்சிகள் தொடர்ந்துள்ளன.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஆய்வுகளில் ஒரு மனிதன் தனது ESP சக்தியின் மூலம் தன்னுடைய உடல் எடையினை அதிகரிக்க முடியும் 50 கிலோகிராம் உள்ள ஒருவர் 200 கிலோ கிராம் வரை தனது எடையினைக் கூட்டிக் கொள்ள முடியும் அதுவும் சர்வ சாதாரணமாக என கண்டறியப்பட்டுள்ளது.
இவ்வகையான பல ஆராய்ச்சிகளின் முடிவாக எமக்குள் பல சக்திகள் பொதிந்துள்ளது என்று ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. அவை மூளையின் சக்தியினால் செயற்படுத்த முடியும் என்பதும் அறியப்பட்டது.
இராமாயண கதாபாத்திரமான அனுமான் தெய்வமாக நம்பப்படுகின்றார் அவரும் அந்தரத்தில் பறப்பது, உடல் எடையைக் கூட்டுவது போன்று கூறப்பட்டுள்ளது.
அவரும் அவ்வாறாக மூளையின் ESP சக்தியினை பயன்படுத்தினாரா என்றால், அக்கால கட்டத்தில் இருந்த தியானம் தவம் போன்ற மன ஒரு நிலைபாட்டில் அனுமான் என்பவர் ஈடுபட்டு அதன் காரணமான இவ்வாறான சக்திகளை அவர் பெற்றுக் கொண்டிருந்துருக்கலாம் என்று சந்தேகம் எழுவது என்னமோ நியாயம் தானே....!
அதே போல புராணத்தில் கூறப்படும் பல தெய்வங்கள் மற்றும தேவதைகள் அவர்களின் இவ்வாறான சக்திகளினாலேயே கடவுள்களாக வர்ணிக்கப்பட்டிருக்கலாம் என்று நான் கூறுவது சரியாக எனக்கு படுகின்றது.
டானியல் டொங்லஸ் ஹியூம் (daniel douglas hume) 1833 ஆம் ஆண்டில் பிறந்த ஒரு மனிதர் இவர் தன் உடல் எடையை கூட்டிக் குறைத்தும், தனது எடல் எடையை விட பல்லாயிரம் கணக்கு அதிக எடை கொண்ட நிறையை தூக்குபவராகவும் அந்தரத்தில் பறக்கும் சக்தியையும் கொண்ட ஒருவராகவே காணப்பட்டார். இது நவீன உலகில் நேரடியாக நிரூபணமான ஒரு உதாரணம்.
இதே போன்ற ESP சக்தியை அனுமான் போன்ற தெய்வங்கள் அதிகளவில் பயன்படுத்தியதால் அவர் தெய்வமாக பார்க்கப்பட்டாரா?
- தொடரும் அடுத்த பதிவில்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக