தொலைக்காட்சி!!

Search This Blog

Wednesday, October 26, 2016

உங்களது விதி உங்களைப் பற்றி என்ன சொல்கிறது?...

விதி என் வாழ்க்கைல விளையாடிச்சுபா! இந்த வாக்கியத்தை பலர் சொல்லி நாம் கேட்டிருப்போம். ஒரு மனிதனின் கைரேகையை வைத்தே அவன் வாழ்க்கை, குணாதியங்கள், அதிர்ஷ்டம் போன்றவற்றை கணிக்கலாம் என ஜோதிடம் சொல்கிறது. சரி ஒவ்வொருவருக்கும் ஒருவிதமான கைரேகை இருக்கும் அதை பற்றி தற்போது பார்ப்போம்.

ஒருவருக்கு ஒத்த இயல்பு கொண்ட கைரேகைகள் இருந்தால் அவருக்கு வாழ்க்கையில் இதை தான் நாம் சாதிக்க வேண்டும் என்ற நோக்கம்/குறிக்கோள் இருக்கும். இப்படி ரேகை இருப்பவர்கள் சுய கட்டுப்பாடுடன் இருப்பார்கள்.
விதி ரேகை நடுவிரலின் கிழிலிருந்து ஆரம்பமானால் அவர்கள் எல்லா விடயங்களிலும் சுதந்திர செயல்பாட்டை மேற்கொள்வார்கள் என அர்த்தமாகும், மேலும் அவர்கள் உறுதி தன்மை உடையவர்களாக இருப்பார்கள்.
கைரேகையானது கிளைகளாக பிரிந்து சென்றால் இப்படி இருப்பவர்களுக்கு இரண்டு விதமான சூழ்நிலை அமையும். ஒரு விடயத்தில் எவ்வளவு போராட்டம், பிரச்சனை வந்தாலும் கடைசியில் அவர்கள் வெல்வார்கள் அல்லது வெற்றி பெற்றவர்களை அவர்கள் சந்தித்த பின் அவர்களின் வெற்றி அமையும்.
கையின் கீழிலிருந்து ரேகை ஆரம்பித்து விளிம்பு பகுதியில் முடிந்தால் அவர்கள் வாழ்க்கை சம அளவில் பயணிக்கும் மற்றும் அவர்களின் சுய தேவையை அவர்கள் பூர்த்தி செய்து கொளவார்கள்.
உயிர் ரேகை வளைவிலிருந்து விதி ரேகை தொடங்கினால் இப்படி ரேகை இருப்பவர்கள் குடும்ப மரபுகளை சரியாக பின்பற்றுபவர்களாக இருப்பார்கள். அவர்கள் எப்போது தங்களை சுற்றி அதிக பாதுகாப்பு தேவை என நினைப்பார்கள்.
கை ரேகை நல்ல பிரவுன் நிறத்திலு, நடுவில் தடை படாமலும் இருந்தால் அது சிறந்த கை ரேகை ஆகும். கை மணிக்கட்டிலிருந்து ரேகை ஆரம்பித்தால் அவர்களின் எப்போது பணம் புழங்கும், அவர்களின் பொருளாதார ரீதியில் நன்றாக இருப்பார்கள்.
விதி ரேகை ஆயுள் ரேகையிலிருந்து தொடங்கினால் அவர் வாழ்க்கை பாதையை அவர்கள் பெvற்றோர் பேச்சை மீறி அமைத்து கொள்வார்கள் என அர்த்தமாகும்.
இரு ரேகைகள் மேலிருந்து கீழே பிரிந்தால் அவர்கள் நன்றாக சம்பாதிப்பார்கள். அவர்களின் சம்பாத்தியம் இரு மடங்காக இருக்கும்.
விதி ரேகை ஆரம்பத்தில் மீன் ரேகை இருந்தால் அவர்கள் ஆன்மீகத்தில் நாட்டமுடையவர்களாக இருப்பார்கள் என அர்த்தமாகும்.
நடுவிரலின் கீழ் பக்கத்தில் விதி ரேகை முடிந்தால் அவர்கள் சுகபோக வாழ்க்கை வாழ்பவர்களாக இருப்பார்கள்.
விதி ரேகையின் நடுவில் விட்டு விட்டு இருந்தால் அவர்கள் வேலையை அடிக்கடி இழப்பவர்களாக இருப்பார்கள்.

No comments:

Post a Comment