* காலை அல்லது மாலையில் வீட்டில் உள்ள மற்றவர்கள் தூங்கிக் கொண்டிருக்கும் போது, விளக்கேற்றக்கூடாது.
* சாமி படங்களுடன், நமது முன்னோரின் படங்களையும் சேர்த்து வைக்கக்கூடாது.
* வீட்டில் தூங்கிக் கொண்டிருப்பவர்களின் தலைக்கு நேராக வைத்து தேங்காய் உடைக்கக் கூடாது.
* பூஜையின் போது, விபூதியை நீரில் குழைத்து பூசக் கூடாது.
* துண்டைக் கட்டிக்கொண்டோ, துண்டை தோளில் போட்டுக் கொண்டோ, ஈர ஆடைகளுடன் சாமி கும்பிடக்கூடாது.
* விளக்கேற்றி வழிபடும்போது, விளக்கில் இருந்து திரி எரியக்கூடாது.
* தேங்காயை 2க்கும் மேற்பட்ட துண்டுகளாக உடைத்தால், அவற்றை சாமிக்கு வைக்கக்கூடாது.
* இயற்கைப் பூக்களுக்குப் பதிலாக, பிளாஸ்டிக் பூக்களையும், மா மற்றும் தென்னை தோரணங்களுக்கு பதிலாக பிளாஸ்டிக் தோரணங்களையும் கட்டுதல் கூடாது.
* குடும்பத்தினர் வெளியே கிளம்பிச் சென்றதும், வீட்டில் பூஜை தொடர்பான எந்த வேலையையும் செய்ய வேண்டாம்.
* வீட்டில் விளக்கு ஏற்றிய பிறகு தானம் தருமம் செய்வது அவ்வளவு சிறப்பல்ல.
* நிவேதனம் செய்த தேங்காயைச் சமையலில் சேர்த்து, அந்த உணவை மறுபடியும் சாமிக்கு நிவேதனம் செய்யக்கூடாது.
- See more at: http://www.manithan.com/news/20161006121982#sthash.6kFQXCAI.dpuf
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக