தொலைக்காட்சி!!

Search This Blog

Friday, October 7, 2016

உங்கள் உடலின் பிரச்சனையெல்லாம் போக்கும் புள்ளிகள்!...

நம் உடலில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண ஏராளமான சிகிச்சை முறைகள் உள்ளன. அதில் ஒன்று தான் அக்குபிரஷர் சிகிச்சை. இந்த சிகிச்சையின் மூலம் உடலின் குறிப்பிட்ட இடத்தில் அழுத்தம் கொடுத்தால், நாம் அனுபவிக்கும் ஒருசில வலிகளில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும். தினமும் இந்த 6 அழுத்தப் புள்ளிகளை அழுத்தினால் உடல் எடையைக் குறைக்கலாம் என்பது தெரியுமா? ஏனெனில் உடலின் ஒவ்வொரு பகுதியும் மற்றொன்றுடன் தொடர்பு கொண்டுள்ளது.

எனவே தான் ஒரு பகுதியில் அழுத்தம் கொடுப்பதனால், பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கிறது. கழுத்துக்கு பின் ஐஸ் கட்டியை 20 நிமிடம் வைப்பதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து தெரியுமா? ஆனால் இப்படி அழுத்தம் கொடுக்கும் போது ஒரு விஷயத்தை நினைவில் கொள்ள வேண்டும். அது ஒரு புள்ளியை 5 நொடிகள் அழுத்தும் போது, மெதுவாக ஆழமாக மூச்சை உள்ளிழுத்து வெளிவிட வேண்டும். மனதை அமைதிப்படுத்தி நினைவு திறனை அதிகரிக்க இந்த 2 இடத்துல அழுத்துங்க… சரி, இப்போது நம் உள்ளங்கையில் எந்த பகுதியில் அழுத்தம் கொடுத்தால் என்ன பிரச்சனைகள் விலகும் என்று பார்ப்போம்.
பெருவிரலின் அடிப்பகுதி சளித் தொல்லை மற்றும் சுவாச பிரச்சனை நீங்கவும், உங்கள் தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டை மேம்படுத்தவும், படத்தில் காட்டியவாறு கையில் இருக்கும் பெருவிரலின் அடிப்பகுதியில் அழுத்தம் கொடுக்க வேண்டும்.
பெருவிரலின் மேல் பகுதி படத்தில் காட்டப்பட்ட இடத்தில் அழுத்தம் கொடுப்பதன் மூலம், மன இறுக்கம், பதற்றம் போன்ற குறைவதோடு, மண்ணீரல் மற்றும் வயிற்றின் செயல்பாடு மேம்படும். ஒருவேளை உங்களுக்கு வயிற்று வலி, தவை வலி, சரும பிரச்சனைகள் அல்லது மனரீதியில் மிகுந்த வேதனையை சந்தித்தால், பெருவிரலின் மேல் பகுதியில் அழுத்தம் கொடுங்கள்.
ஆள்காட்டி விரல் ஆள்காட்டி விரலில் படத்தில் காட்டப்பட்ட இடத்தில் அழுத்தம் கொடுத்தால், சிறுநீரகம் மற்றும் பித்தப்பை பிரச்சனைகள் சரியாகும். மேலும் அச்சம், மனக் குழப்பம், ஏமாற்றம் போன்றவற்றில் இருந்து விட்டு மனதிற்கு அமைதி கிடைக்க, தசை வலி, முதுகு வலி, நெஞ்செரிச்சல் மற்றும் பல் வேலி போன்றவற்றில் இருந்து நிவாரணம் கிடைக்கவும், ஆள்காட்டி விரலில் அழுத்தம் கொடுக்கவும்.
நடுவிரல் கல்லீரல் மற்றும் சிறுநீர்ப்பையின் செயல்பாட்டை ஒழுங்குபடுத்தவும் நடுவிரலில் அழுத்தம் கொடுங்கள். இதனால் எரிச்சல் அல்லது இருமனத்துடன் இருப்பது போன்ற மனநிலை நீங்கும், பார்வை மற்றும் இரத்த ஓட்டத்தை மேம்படும், ஒற்றைத் தலைவலி மற்றும் மாதவிடாய் கால வயிற்று வலிகள் நீங்கும்.
மோதிர விரல் நுரையீரல் மற்றும் குடலின் ஆரோக்கியமான செயல்பாட்டைத் தூண்ட மோதிர விரலில் அழுத்தம் கொடுக்க வேண்டும். செரிமான பிரச்சனைகள், சுவாச பிரச்சனைகள் அல்லது சரும பிரச்சனைகள் இருந்தால், மோதிர விரலில் அழுத்தம் கொடுத்தால் விரைவில் விடுபடலாம்.
சுண்டு விரல் சிறு குடல் மற்றும் இதயத்தின் செயல்பாட்டை சுண்டு விரலில் அழுத்தம் கொடுப்பதன் மூலம் சீராக்கலாம். மேலும் இந்த பகுதியில் அழுத்தம் கொடுத்தால், வயிற்று உப்புசம், தொண்டை வலி, எலும்பு பிரச்சனைகளும் நீங்கும். முக்கியமாக இப்பகுதியில் அழுத்தம் கொடுத்தால், மன உறுதி அதிகரிக்கும்.
உள்ளங்கையின் வெளிப்புறம் படத்தில் காட்டப்பட்டவாறு உள்ளங்கையின் வெளிப்புறத்தில் அழுத்தம் கொடுப்பதால், இரத்த சர்க்கரை அளவை சீராக்கலாம் மற்றும் அப்பெண்டிக்ஸ் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
உள்ளங்கை உள்ளங்கையில் அழுத்தம் கொடுத்தால், செரிமான பிரச்சனைகள் அல்லது அடிவயிற்று வலியில் இருந்து விடுபடலாம்.
உள்ளங்கையின் மேட்டு பகுதி இந்த புள்ளியானது நாளமில்லா சுரப்பி மற்றும் இதய செயல்பாட்டுடன் தொடர்பு கொண்டது. இப்புள்ளியில் அழுத்தம் கொடுத்தால், ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் சமநிலையாக்கப்படுவதோடு, இதய பிரச்சனைகளில் இருந்தும் விடுபடலாம்.

No comments:

Post a Comment