தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 14 அக்டோபர், 2016

ராவணன் பற்றிய பல உண்மைகள்!

ராவணனை பற்றிய சில உண்மைகள் இதோ,
  • ராவணன் பாதி பிராமண குலத்தையும், பாதி அசுர குலத்தையும் சேர்ந்தவன். இவர் தந்தையின் பெயர் விஷ்ராவா ரிஷி முனிவர். இவரின் தாய் கைகாசி அசுர குலத்தை சேர்ந்தவர்.
  • ராவணனின் தந்தைக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவியின் பெயர் வாரவர்சினி, இவர்களின் ஒரே மகன் தான் செல்வத்துக்கு கடவுளான் குபேரன். விஷ்ராவாவின் இரண்டாவது மனைவியான கைகாசிக்கு ராவணன், கும்பகர்ணன், விபீஷணன், சூர்பனகை என நான்கு பிள்ளைகள் உண்டு.
  • ராவணனின் இயற்பெயர்கள் தசகிரிவா மற்றும் தசாநனா என்பதாகும். பின்னர் ராவணன் என எல்லோராலும் அழைக்கப்பட்டார்.
  • ராவணன் மிக பெரிய சிவ பக்தன் ஆவார். அவரின் நெற்றியில் திருநீறு எப்போதும் இருக்கும்.
  • இலங்கை என்றும் அழியாமல் இருக்க சிவபெருமானை நோக்கி தவமிருந்தார் ராவணன். தவத்தில் மகிழ்ந்த சிவபெருமாள் ஆத்மலிங்கத்தை ராவணனுக்கு தந்தார். அதை இலங்கை செல்லும் வரை கீழே வைக்க கூடாது என்றார், ஆனால் தேவர்களின் சூழ்ச்சியால் ராவணனால் அதை இலங்கைக்கு கொண்டு செல்ல முடியவில்லை.
  • அனரன்யா மன்னரை ராவணன வதம் செய்தார். அந்த மன்னர் இறக்கும் போது  தசரதன் மகனால் தான் உனக்கு இறப்பு என கூறினார். அதன்படியே ராமனால் வதம் செய்யப்பட்டார் ராவணன்.
  • குரங்கு குல தலைவனான வாலியை ராவணன் கொல்ல முயற்சித்தார். ஆனால் மிக சக்தி வாய்ந்த வாலி ராவணை தன் கையால் தூக்கி கொண்டு கிஸ்கிந்தைக்கு சென்றது. அங்கு உனக்கென்ன வரம் வேண்டும் என கேட்க இருவரும் நண்பர்களாக இருப்போம் என ராவணன் கூறினார், பின்னர் இருவரும் நண்பர்களானார்கள்.
  • போர் குணம் கொண்ட ராவணனுக்கு ஜோதிடம் பார்க்கும் அபார திறமையும், வேத மந்திரங்களை கற்று தேறிய ஆற்றலும் இருந்தது.
  • ஆட்சி கலையில் சிறந்து விளங்கியவர் ராவணன். ராமன் அவரை வதம் செய்த போது ராவணன் இறக்கும் தருவாயில் இருந்தான். அப்போது தன் தம்பி லட்சுமணனை ராவணனிடம் அனுப்பிய ராமன், அவனிடம் ஆட்சி கலையை கற்று கொள்ளும்படி சொன்னார்.
  • ராவணனின் தம்பி விபீஷணன் ராமனின் தீவிர பக்தனாவார். பத்தாவது நாள் போரின் போது ராமனிடன் தன் அண்ணனின் வயிற்று பகுதியில் அம்பை விட சொன்னது இந்த விபீஷணன்தான்.
  • ராவணன் கடும் தவம் செய்து பிரம்மனிடம் தன் உயிருக்கு எந்த கடவுளாலும், முனிவராலும், அரக்கர்களாலும் ஆபத்து வர கூடாது என வரம் கேட்டான். அது கிடைக்கவும் செய்தது. ஆனால் மனித உருவெடுத்த ராமன் பின்னாளில் ராவணனை வதம் செய்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக