தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 30 அக்டோபர், 2016

தீபாவளியின் பின்னணியில் நரகாசூரனா? இராவணனா? (படம் இணைப்பு )!

இந்துக்கள் தீபாவளி கொண்டாடுவதற்கு பல காரணங்களை, புராணக் கதைகளின் வழியாகக் கூறுகின்றனர் அவையாவன...

இராமன் பதினான்கு வருடங்கள் வனவாசம் முடித்து, நாடு திரும்பும் போது மக்கள் விளக்கேற்றி வரவேற்றனர் என்கிறது ஒரு புராணக் கதை.

இன்னொரு புராணக் கதையின்படி கிருஷ்ணரின் இரு மனைவியருள் ஒருத்தியான நிலமகளுக்கு பிறந்த மகன் ஒரு அசுரன். அப்போது கிருஷ்ணர் வராக(பன்றி) அவதாரம் எடுத்திருந்தார். பிறந்த அசுரனின் பெயர் நரகன். அந்நரகன், தன் அன்னையால் மட்டுமே தனக்கு இறப்பு ஏற்பட வேண்டும் என்று வரம் வாங்கியிருந்தான். அவ்வசுரனின் அநீதிகளை நிறுத்த வேண்டி, கிருஷ்ணர் தனது திறமையால் அந்நரகாசுரனை கொல்கிறார்.

கிருஷ்ணர், நரகாசுரன் என்ற அந்த அசுரனைக் கொன்ற போது, அவன் தான் இறக்கும் தினத்தை மக்கள் கொண்டாட வேண்டும் என்று கேட்ட வரத்திற்கிணங்க தீபாவளி மகிழ்ச்சியாகக் கொண்டாடப்படுகின்றது.

இராமாயண இதிகாசத்தில், இராமர், இராவணனை அழித்து விட்டு, தனது வனவாசத்தையும் முடித்து விட்டு, மனைவி சீதையுடனும் சகோதரன்இலட்சுமணனுடனும் அயோத்தி திரும்பிய நாளை, அயோத்தி மக்கள் ஊரெங்கும் விளக்கேற்றிக் கொண்டாடி மகிழ்ந்தனர். இந்நாளே தீபாவளியாக கொண்டாடப் படுவதாக வட இந்தியாவில் கருதப் படுகிறது.

கந்த புராணத்தின் படி, சக்தியின் 21 நாள் கேதார விரதம் முடிவுற்றது இத்தினத்தில் தான். விரதம் முடிவடைந்த பின்னர் சிவன், சக்தியை தன்னில் ஒரு பாதியாக ஏற்று ‘அர்த்தநாரீஸ்வரர்’ உருவமெடுத்தார்.
29 Oct 2016


http://www.manithan.com/news/20161030122469?ref=thiraivideo

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக