தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 30 அக்டோபர், 2016

பற்களின் மஞ்சள் கறை நீங்கி பளிச்சிட சிறப்பான வழிகள்!

தினமும் காலையில் எழுந்து பற்கள் விலக்கும் பலரும் பற்களின் முன்புறத்தில் இருக்கும் கரையை நீக்குவதில் மட்டும் அக்கறை எடுத்துக் கொள்வார்கள்.
பற்களின் பின் புறத்தில் உள்ள மஞ்சள் கறையை நீக்க யாரும் முயற்சிப்பதில்லை.
இதனால் பற்களின் பின்புறம் உள்ள மஞ்சள் கறைகள் நமது வாயின் ஆரோக்கியத்தை முற்றிலும் பாதித்து விடுகிறது.
எனவே பற்களின் பின்புறம் இருக்கும் மஞ்சள் கறைகளைப் போக்குவதற்கு சுப்பரான டிப்ஸ் இதோ!
எள்ளு
எள் ஸ்கரப்பர் போன்ரு செயல்படுவதால், சிறிது எள் விதைகளை வாயில் போட்டு விழுங்காமல் நன்கு மெல்ல வேண்டும்.
பின் வெறும் டூத் பிரஷ் கொண்டு பற்களை நன்றாக தேய்க்க வேண்டும். இதனால் பற்களில் உள்ள மஞ்சள் கறைகள் நீங்கி விடுகிறது.
கல் உப்பு
தினமும் காலையில் பற்களைத் துலக்கும் போது, சிறிது கல் உப்பை டூத் பிரஷ்ஷில் வைத்து, பற்களை நன்றாக துலக்க வேண்டும்.
பின் குளிர்ச்சியான நீரால் வாயைக் கொப்பளிக்க வேண்டும். இதனால் பற்களில் மஞ்சள் கறைகள் படிவது தடுக்கப்படுகிறது.
பேக்கிங் சோடா
ஒரு டீஸ்பூன் பேக்கிங் சோடா மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து, டூத் பிரஷை நீரில் நனைத்துப் பின் அந்தக் கலவையைத் தொட்டு பற்களைத் துலக்கி நன்றாக வாயை கொப்பளிக்க வேண்டும்.
இதனால் விரைவில் மஞ்சள் கறைகள் காணாமல் போய்விடும்.
ஆரஞ்சு தோல்
ஆரஞ்சு தோலை நன்றாக அரைத்து, அதனை பற்களில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து, பின் தேய்த்து கழுவ வேண்டும். இதனால் பற்களில் இருக்கும் கறைகள் நீங்கி வெண்மையாக பளிச்சிடும்.
காய்கறிகள் மற்றும் பழங்கள்
பற்களில் மஞ்சள் கறைகள் அதிகம் படாமல் இருக்க ஆப்பிள், கேரட், பேரிக்காய், வெள்ளரிக்காய் போன்ற பழங்கள் மற்றும் காய்கறிகளை தினமும் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், பற்களின் கறைகள் ஏற்படாமல் ஆரோக்கியமாக இருக்கும்.
அத்திப்பழம்
தினமும் அத்திப்பழம் சாப்பிடுவதால், அந்த பழத்தில் உள்ள சத்துக்கள் பற்களில் இருக்கும் பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடி, பற்களில் படிந்திருக்கும் மஞ்சள் கறைகளை நீக்கி ஆரோக்கியமாக வைக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக