தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 16 அக்டோபர், 2016

எதற்காக நண்டு சாப்பிட வேண்டும்? காரணங்கள் இதோ

மட்டன், சிக்கன் உணவுகளை விட கடல் உணவுகளில் சத்துக்கள் அதிகம் என மருத்துவர்கள் பரிந்துரை செய்கிறார்கள்.
மீன், இறால், கணவாய், நண்டு என கடல் வகை உணவுகளில் வாரத்திறகு ஒருமுறையாவது சாப்பிடுங்கள்.
இதில் ஒன்றான நண்டினை சாப்பிடுவதன் மூலம் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன.
நண்டில் உள்ள சத்துக்கள்
புரோட்டின், ஒமேகா 3 பேட்டி ஆசிட், செலினீயம், விட்டமின் பி2, காப்பர் மற்றும் பாஸ்பரஸ் போன்ற கனிமச்சத்துக்கள் அதிகளவில் உள்ளன. மேலும் இதில் கொழுப்புக்கள் மற்றும் கலோரிகள் மிகவும் குறைவு.
மருத்துவ பயன்கள்
நண்டில் அதிக அளவிலான புரோட்டின் சத்துக்கள் இருப்பதால், அனைத்து வயதினரும் இதனை சாப்பிடுவது நல்லது, ஏனெனில் தசைகளின் சீரமைப்புக்கு உதவுகிறது.
அதிக அளவிலான மினரல்ஸ், விட்டமின் மற்றும் குறைந்த அளவிலான கொழுப்பு இருப்பதால் இதய நோய்களிலிருந்து காக்கிறது, மேலும் மூளைகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது.
நண்டு சாப்பிடுவதன் மூலம் மனிதர்களின் நடவடிக்கையில் மாறுபாடுகள் ஏற்படும் என சில ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
உடலில் உள்ள திசுக்கள் மற்றும் செல்களில் ஏற்படும் சேதத்தினை தடுக்க இதில் உள்ள செலீனியம் சத்து உதவுகிறது.
இதில் உள்ள ரிபோபிளேவின் சத்து, ரத்த சிவப்பு அணுக்களின் உற்பத்திக்கு உதவுகிறது,மேலும் கண்கள், தோல் மற்றும் நரம்பு மண்டல செயல்பாட்டினையும் ஊக்குவிக்கிறது.
பருக்கள் இருந்தால், நண்டுகளை சாப்பிடுங்கள். ஏனெனில் நண்டில் உள்ள ஜிங்க், எண்ணெய் சுரப்பை கட்டுப்படுத்தும். இதனால் முகப்பருக்கள் ஏற்படுவது தடுக்கப்படும்.
கர்ப்பிணிகள் நண்டு சாப்பிடக்கூடாது. ஆனால் கருத்தரிக்க நினைக்கும் பெண்களுக்கு ஃபோலேட் மிகவும் இன்றியமையாதது. இந்த சத்து காய்கறிகள் மற்றும் பழங்களில் இருந்தாலும், நண்டில் அதிகமாகவே உள்ளது. எனவே இதனை கருத்தரிக்க நினைக்கும் போது அவ்வப்போது எடுத்து வந்தால், குழந்தைகளுக்கு நல்லது.
இதில் உள்ள மினரல் சத்துக்கள் எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது.
இதில் கனிமச்சத்தான பாஸ்பரஸ் நிறைந்துள்ளது, நாம் உண்ணும் உணவை ஆற்றலாக மாற்றுகிறது.
சிறுநீரக செயல்பாடு சரியான முறையில் நடப்பதற்கு உதவுகிறது.
நண்டு சூப்
நண்டின் கால்களை ஒடித்து அதன் மேல் பகுதியில் நீக்கி மஞ்சள்தூள் போட்டுக் கழுவிக் கொள்ள வேண்டும்.
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கறிவேப்பிலை,
வெங்காயம், பச்சை மிளகாய், மிளகு, தக்காளியை வதக்கி கொள்ள வேண்டும்.
வதக்கியதும் அதில் நண்டைப் போட்டுத் தேவையான நீர் விட்டு வேக வைக்க வேண்டும்.
வெந்ததும் நண்டைத் தனியே எடுத்து விடுங்கள். மைதாவை நீரில் கரைத்துக் கொதிக்கும் கலவையில் ஊற்றி ஒரு கொதி வந்ததும் இறக்கி சூடாக பரிமாறலாம்.
காய்கறி சேர்த்துக்கொள்ள வேண்டுமென்றால் சேர்த்துக்கொள்ளுங்கள்.
பயன்கள்
நண்டு சூப் மிகவும் சுவையான சூப், மேலும் இது உடலுக்கு நல்ல தெம்பு தருகிறது.
ஜலதோஷம் உள்ளிட்ட பல பிரச்சனைக்களுக்கு சிறந்த நிவாரிணியாக செயல்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக