தொலைக்காட்சி!!

Search This Blog

Sunday, October 9, 2016

இலங்கை அரசியல் எதிர்காலத்தினை புரட்டி போட்ட காரணம் என்ன தெரியுமா?

இலங்கை அரசியல் எதிர்காலத்தினை புரட்டி போட்ட அரசியல் சீர்திருத்தம் கோல்புறூக் ஆகும்.எதிர் காலத்தில் பாராளுமன்றம் என்ற ஒன்று உருவாக இந்த யாப்புதான் காரணமாகும்.
கோல்புறூக் அரசியல் சீர்திருத்தம் என்பது இலங்கையை பிருத்தானியர் ஆக்கிரமித்திருந்த காலப்பகுதியில் இலங்கை அரசியல் நிர்வாக முறையில் பிருத்தானியரால் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தமாகும்.
இது 1833 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தம் ஆகும்.இந்த சீர்திருத்தம் கோல்புறூக், கமரன் ஆகியோரின் தலைமையிலான குழுவினரால் மேற்கொள்ளப்பட்டது.
கோல்புறூக் சீர்திருத்தத்தின்படி சட்டசபை அமைப்பு
சட்டசபை -15 உறுப்பினர்கள்
உத்தியோகப்பற்றுள்ளவர் - 9 உறுப்பினர்கள்
உத்தியோகப்பற்றற்றவர்கள் -6 உறுப்பினர்கள்
ஐரோப்பியர்கள் -3 உறுப்பினர்கள்
பறங்கியர் -1 உறுப்பினர்கள்
தமிழர் - 1 உறுப்பினர்கள்
சிங்களவர் - 1உறுப்பினர்கள்
கோல்புறூக் அரசிய சீர்திருத்தத்தின்படி இலங்கையில் சட்டசபை உருவாக்கப்பட்டது. இது 15 உறுப்பினர்கள் கொண்டதாக இருந்தது.
இதில் 9 பேர் உத்தியோகப்பற்றுள்ளவர்கள். சபையில் உத்தியோகம் பார்ப்பதன் மூலம் சபையில் இவர்கள் அங்கம்வகித்தனர். 6 பேர் உத்தியோகப்பற்றற்றவர்களாக இருந்தனர்.
கடந்த 1889ஆம் ஆண்டு உத்தியோகப்பற்றற்றவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்த்தப்பட்டது.
கண்டிச் சிங்களவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் தலா 1 ஆசனம் ஒதுக்கப்பட்டது. சட்டசபைக்கு தேசாதிபதியே தலைமை தாங்கினார்.
சபைக்கு தேவையான பெரும்பாலான மசோதாக்கள் தேசாதிபதியாலேயே சபையில் அறிமுகப்படுத்தப்பட்டன.
உத்தியோகப்பற்றற்ற அங்கத்தவர்களுக்கு ஆரம்பத்தில் மசோதாக்களை கொண்டுவரும் உரிமை வழங்கப்படவில்லை.
1859 ஆம் ஆண்டு இவ்வுரிமை அவர்களுக்கு வழங்கப்பட்டது.
சட்ட நிர்வாகக் கழகத்தில் தெரிவு செய்யப்பட்ட 6 உறுப்பினர்களும் முறையே கொழும்பு அரசாங்க அதிபர், தனாதிகாரி, நிலஅளவை அதிகாரி, கணக்காய்வாளர், வருமானவரி அதிகாரி என்போராவர்.
குறூ – மக்கலம் அரசியல் சீர்திருத்தத்தின் நன்மைகள்
இலங்கையின் அரசியல் யாப்பு வளர்ச்சியில் ஓர் அடுத்த கட்டபடியாக இவ் அரசியல் சீர்திருத்தம் காணப்பட்டது. இதில் அறிமுகப்படுத்தப்பட்ட தேர்தல் முறையும் கற்றோர் குழாமிற்கான பிரதிநிதித்துவமும் அரசியல் யாப்பின் வளர்ச்சியை காட்டுவனவாக விளங்கின.
கற்றோர் குழாமின் அரசியல் பிரவேசம் அரசியல் இயக்கங்கள் உருவாக்கப்படுவதற்கும் அரசியல் சீர்திருத்த கோரிக்கைகள் இலங்கை மக்களின் சார்பில் தொடர்ச்சியாக முன் வைக்கப்படுவதற்கும் காரணங்களாக விளங்கின.
தோட்டப்புற ஐரோப்பியர் சார்பிலும் ,நகர்ப்புற ஐரோப்பியர் சார்பிலும் பிரதிநிதிகள் தேர்தலின் மூலம் தெரிவு செய்யப்பட்டமையானது பெருந்தோட்டத்துறையும் அது சார்ந்த உப தொழில்களும் வளர்ச்சி அடைவதற்கு காரணங்களாக விளங்கின.
உத்தியோக பற்றற்ற அங்கத்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்தமையானது சுதேசிகளின் வலுவினை பலப்படுத்துவமதாக இருந்தது.
குறூ மக்கலம் அரசியல் சீர்திருத்தத்தின் குறைபாடுகள்
தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்ட போது தேர்தலில் வாக்களிக்கும் உரிமை அனைவருக்கும் வழங்கப்படவில்லை. கல்வி ,அறிவு, உள்ளவர்களுக்கும் ,சொத்து உடையவர்களுக்கும் மட்டுமே வழங்கப்பட்டிருந்தன. இவர்கள் இலங்கையில் மொத்த சனத்தொகையில் ஏறத்தாழ 4% மாக மட்டுமே காணப்பட்டனர்.
இவ் அரசியல் சீர்திருத்தத்திலும் தோட்டப்புற ஐரோப்பியர் பிரதிநிதித்துவம் ,நகர்ப்புற ஐரோப்பியர் பிரதிநிதித்துவம் என்பவற்றின் ஊடாக தோட்டத்துறையின் அபிவிருத்தியிலே கூடுதலான கவனம் செலுத்தப்பட்டது. இதனால் வறண்ட விவசாயத்துறை தொடர்ச்சியாக புறக்கணிக்கப்பட்டதோடு கைத்தொழிற்துறை பற்றி எதுவித கவனமும் செலுத்தப்படவில்லை.
இவ் அரசியல் சீர்தித்தத்திலும் தேசாதிபதி மேலான அதிகாரத்தை கொண்டவராக விளங்கினார். சட்ட ஆக்க விடயங்களில் இறுதி முடிவெடுக்கும் அதிகாரம் இவருக்கே இருந்தது.
சட்ட நிரூபண சபையும்,சட்ட நிருவாக சபையும் வேறு வேறான ஊறுப்பினர்களை கொண்டிருந்தமையினால் சட்டததை உருவாக்குபவர்களுக்கு சட்டததை ஆமல்படுத்துவதில் பங்கு இருக்கவில்லை.
படித்த இலங்கையர்களும் அவர்களது பிரதிநிதியும் மிதவாத அரசியலை பின்பற்றியதனால் அவர்கள் தீவிரமான நிலையில் இலங்கை சுதந்திர போராட்டத்தை நடத்த முன்வரவில்லை.
இவர்கள் ஆதிக்கம் வாய்ந்த சக்திகளாக இருந்தமையிகால் பின்னர் தோற்றம் பெற்ற தீவிரவாதிகளினாலும் இவர்களை மீறி வளர முடியவில்லை. இதனால் ஒர ஒழுங்குபடுத்தப்பட்ட சுதந்திரப் போராட்டம் என்பது இலங்கையில் தோற்றம் பெறுவதற்கான வாய்ப்பு இருக்கவில்லை.http://www.tamilwin.com/education/01/120390?ref=morenews

No comments:

Post a Comment