அளவுக்கு அதிகமாக உண்ணாதீர்கள்.
அதற்காக பட்டினியும் கிடக்க வேண்டாம்.
அதிக நேரம் தூங்காதீர்கள். அதற்காக மிகக் குறைவாகவும் தூங்க வேண்டாம்.
பொறாமை குணம் இருந்தால் விரட்டி விடுங்கள்.
சந்தேகமும், சஞ்சலபமும்தான் உங்கள் முதல் எதிரிகள். அவற்றை துரத்தியடியுங்கள்.
சோம்பல் உங்களிடம் இருந்தால் முதலில் அதை ஒழித்துக் கட்டுங்கள்.
எந்த சூழ்நிலையிலும் பேராசை கொள்ளாதீர்கள்.
உடல் தூய்மை முக்கியமானது. அதனால் தினமும் குளியுங்கள்.
எப்போதும் நல்லதை மட்டுமே மனதால் நினையுங்கள். அப்போது நல்லவை மாத்திரமே நடக்கும். நினைக்கும் பொருளாகவே ஆகும் தன்மை நம்மிடமே இருக்கிறது.
எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள். தைரியமாகவும் இருக்க பழகிடுங்கள்.
பொறுமையும், விடா முயற்சியும் நமது நல்ல நண்பர்கள். எப்போதும் இவற்றுடனேயே இணைந்திருக்கப் பழகுங்கள்.
இதையெல்லாம் நீங்கள் செய்தால் உங்கள் வெற்றி உறுதி என்கிறார் சுவாமி விவேகானந்தர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக