யாழ்ப்பாணத்திலுள்ள சுண்டிக்குளியில் பிறந்த, தமிழ் தட்டச்சின் தந்தையின் படத்தைக் காண்கிறீர்கள்
பிப்ரவரி 24: தமிழ் தட்டச்சின் தந்தை என்று அழைக்கப்படும் இரா.முத்தையா அவர்கள் பிறந்த தினம்
யாழ்ப்பாணத்திலுள்ள சுண்டிக்குளியில் பிறந்த இவர். மிக இளம் வயதில் தந்தையை இழந்து தாயின் பராமரிப்பில் வளர்ந்த இவர் மலேயாவிற்கு(மலேசியா மற்றும் சிங்கப்பூர் இணைந்த பகுதி ) தன் இருபத்தி ஒரு வயதில் வேலை தேடிப்போனார் .டேனியல் எனும் மதபோதகர் இவரை ரயில்வே இலாகாவில் பணியமர்த்தினார் . பின் ஒரு பிரபல நிறுவனத்தில் எழுத்தராக வேலைக்கு சேர்ந்து அங்கே கணக்குப் பதிவு, பொருளாதாரம், அச்சடித்தல், சுருக்கெழுத்து ஆகியவற்றை கற்றுக்கொண்டார் .1913-இல் நடைபெற்ற ஸ்லோன் டுப்ளோயன் சுருக்கெழுத்துப் போட்டியில் சர்வதேச வெள்ளிப் பதக்கம் இவருக்கு வழங்கப்பட்டது .ஆங்கிலத்தில் ஒரு தட்டச்சு இயந்திரம் இருப்பது போல ஏன் தமிழருக்கும் ஒரு ஒழுங்கான தட்டச்சு இயந்திரம் உருவாக்க கூடாது என்கிற எண்ணம் அவருக்கு உண்டானது. பல நண்பர்களிடம் உதவி கேட்டார் நாற்பத்தி ஆறு விசைகளில் 247 எழுத்தை உள்ளடக்குதல் மிகப்பெரிய சவாலாக வந்து நின்றது .நகரா விசையை இச்சிக்கலை தீர்க்க பயன்படுத்தினார் இவர். குறிப்பிட்ட சில குறிகள் தொடர்ந்து வருவதால் அவற்றை தனி விசைகள் ஆக்கினார் . க,த,ண,ன ஆகியவற்றை தனி விசைகளில் வைத்தார்.
வெறுமனே கண்டுபிடித்து விட்டு நின்று விடாமல் ஜெர்மனியில் இருந்த சைடல் அன்ட் நளமான் நிறுவனத்துக்கு அதை அனுப்பி எண்ணற்ற தட்டச்சு இயந்திரங்களை உருவாக்கி அவற்றை விற்றார் . அவரின் தட்டச்சு இயந்திரத்தின் மாதிரியை தமிழக அரசு பெரும்பாலும் ஏற்றுக்கொண்டு தட்டச்சு இயந்திரத்தில் ஒருமைப்பாட்டை கொண்டு வந்தது . தமிழ் அச்சுத்துறையில் மாபெரும் மாற்றத்துக்கு காரணமான அவரின் நினைவுகளை தமிழர்கள் மறக்காதீர்
இன்று எல்லோருடைய கைகளில் தவழும் பைபிள் கூட ஈழத் தமிழனான ஆறுமுக நாவலர் அவர்களை சாரும்
தமிழ் மொழி அகராதி கதிரவேற்பிள்ளை அவர்களை சாரும் இன்னும் பல
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக