தொலைக்காட்சி!!

Search This Blog

Friday, February 14, 2014

கணிகர் நீதி - ஆதிபர்வம் 142 இ


(சம்பவ பர்வத் தொடர்ச்சி)

ஒரு மன்னன், அனைத்தையும் தனது ஒற்றர்களின் கண்களால் கண்டு, வசை சொல்லுக்கு அஞ்சாமல் தனது அலோசகர்களை அருகிலேயே வைத்துக் கொள்ள வேண்டும். அவன், தனது எதிரியின் ஒற்றர்கள் முன்பு, தனது உணர்வுகளை மறைக்க வேண்டும். ஒரு மீனவன் மீன்களைப் பிடித்து கொன்று வளமையடைவதைப் போல, ஒரு மன்னன் தனது எதிரியின் உயிர் போன்ற முக்கியமானவற்றைக் கிழிக்காமலும், கொடூர செய்கைகள் செய்யாமலும் இருந்தால் வளமை பெற முடியாது. உனது எதிரியின் பலம், அவனது படைபலத்தில் உள்ளது. அது முற்றிலும் நிர்மூலமாகப்பட்ட வேண்டும். அவற்றை உழுது மேலேயெடுத்து, கத்தரித்துத் தள்ளாவிட்டால், நோயால் தாக்கப்பட்டு, பசியால் துன்பப்பட்டு, குடியை எதிர்பார்க்க வேண்டியதிருக்கும் {and want of drink என்கிறார் கங்குலி}. தேவையிருக்கும் ஒருவன் ஒருபோதும் (விருப்பத்தால்) வளமானவனை நாடமாட்டான்.
ஒருவனின் தேவை பூர்த்தியான பிறகு, அவன் எதையும் பெறுவதற்காக யாரையும் அணுகத் தேவையில்லை. ஆகையால், நீ ஒருவனுக்கு எதையும் செய்தால், அதை முழுமையாகச் செய்யாதே. ஆனால், மற்றவர்கள் (அவர்களின் தேவை உனக்கிருப்பின், அவர்கள்) விரும்பிக் கேட்கும்படி ஏதையாவது மிச்சம் வை. வளமையில் விருப்பமுள்ள ஒருவன், எப்போதும் அக்கறையுடன் கூட்டாளிகளையும், ஆதாரங்களையும் தேடிக் கொண்டு, கவனமாகத் தனது போரைத் தொடுக்க வேண்டும். இக்காரியங்களில் அவனது உழைப்பு, மதிநுட்பத்தால் வழிநடத்தப்பட வேண்டும். ஒரு மதிநுட்பம் வாய்ந்த மன்னன் எப்போதும், தான் செய்யப்போகும் காரியங்களின் நோக்கத்தை, நண்பர்களும் எதிரிகளும் அறியா வண்ணம் வைத்திருக்க வேண்டும். பிறகு, அந்தச் செயல் செய்யப்படும்போதோ அல்லது முடியும்போதோ, அதை அவர்கள் உணர்ந்து கொள்ளட்டும். ஆபத்து நேராத வரை மட்டுமே நீ அஞ்சுவது போல நடிக்க வேண்டும். ஆனால் ஆபத்து நெருங்கிவிட்டால், நீ தைரியமாக அதைப் பற்றிப் பிடிக்க வேண்டும். பலத்தால் தனது கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட எதிரியை நம்புபவன், தனது கருத்துருவில் செயல்படும் நண்டைப் போலத் தனது மரணத்தைத் தானே வரவழைத்துக் கொள்கிறான். எதிர்காலத்தில் நீ செய்ய வேண்டிய காரியத்திற்கு {ஆபத்து கருதி} இப்போதே அவசியம் வந்துவிட்டதாக நீ உணர வேண்டும் (அதைச் சந்திக்க ஒரு ஒத்திகை பார்க்க வேண்டும்). இல்லாவிட்டால், ஆபத்து வரும்போது, அவசரத்தால் ஏற்படும் அமைதியின்மையால், முக்கியமான நிகழ்வுகளை நீ கவனிக்கத் தவறிவிடுவாய். வளமையை விரும்பும் ஒருவன், இடம் மற்றும் நேரமறிந்து எப்போதும் மதிநுட்பத்துடன் செயல்புரிய வேண்டும். அவன் விதியைக் கட்டுப்படுத்தும் மந்திரங்கள் மீதும், வேள்விகள் மீதும், அறம், பொருள் இன்பத்தின் மீதும் எப்போதும் ஒரு கண் வைத்திருக்க வேண்டும். இடமும், நேரமும் (கருத்தில் கொள்ளப்பட்டால்) பெரும் நன்மையை விளைவிக்கும் என்பது நன்கு அறியப்பட்ட ஒன்றாகும். எதிரியானவன் முக்கியமற்றவனாக இருப்பினும், அவன் வெறுக்கப்படவே வேண்டும். விரைவில் அவன் தனது வேர்களை அகலமாக விரிக்கும் பனை மரமாகவோ, அல்லது ஆழ்ந்த கானகத்தில் எழும்பும் தீப்பொறியாகி பெரும் நெருப்பை மூட்டுபவனாகவோ மாறலாம். சிறு நெருப்பு தொடர்ந்து விறகிடப்படுவதால் பெரும் பகுதிகளை எரிக்கும் சக்தி பெறுகிறது, அதே போல ஒரு மனிதன் கூட்டாளிகளையும் நண்பர்களையும் ஏற்படுத்திக் கொண்டால், விரைவில் வல்லமைமிக்க எதிரியைக் கூட அடக்கும் வலிவு பெறுவான். உனது எதிரிக்கு நீ கொடுக்கும் நம்பிக்கை, அது நிறைவேறுவதற்கு வெகு முன்னரே மாறிவிட வேண்டும். காரியத்தை முடிக்க நேரம் வரும்போது, அவனிடம் பிணக்கு வர ஏதாவது சாக்கை {சாக்கு, காரணம்} நீ உற்பத்தி செய்ய வேண்டும்.  ஏதாவது ஒரு காரணத்தைக் கண்டுபிடித்து சாக்கு கூற வேண்டும். அந்தக் காரணம், மற்றொரு காரணத்தில் இருந்து வந்ததாகவும் காட்டிக் கொள்ள வேண்டும். எதிரிகளை அழிக்கும் காரியத்தில் மன்னர்கள் அனைத்துத் தகுதியிலும் கூர்மையான கத்தியைப் போல இருக்க வேண்டும். கருணையற்று கூர்மையாக, தோலுறைக்குள் மறைத்து வைக்கப்பட்டு, தேவைப்படும்போது சிரத்தை மழிக்கவோ அல்லது தாடையில் ஒரு முடியில்லாமல் {தாடை மழித்தல்} எடுக்கவோ வெகு கூர்மையான ஒரு கத்தியைப் போல் அவன் இருக்க வேண்டும். ஓ குரு குலத்தவரின் பெருமைகளைத் தாங்குபவனே, பாண்டவர்களையும் மற்றவர்களையும் கவனித்து, ஒரு கொள்கையை உருவாக்கிக் கொள். பின்னர் நீ துன்பத்துக்குள்ளாகாதவாறு இப்போதே செயல்படு. நீ அனைத்தும் அருளப்பட்டவன் என்பதையும், அனைத்து அதிர்ஷ்டக் குறிகளையும் பெற்றவன் என்பதையும் நான் அறிவேன். ஆகையால், ஓ மன்னா, பாண்டுவின் மைந்தர்களிடம் இருந்து உன்னைக் காத்துக் கொள்! ஓ மன்னா, பாண்டுவின் மைந்தர்கள், அவர்களது சகோதரர்களை விட (உன் மகன்களை விட) பலசாலிகள்; ஆகையால், ஓ எதிரிகளை தண்டிப்பவனே, நீ என்ன செய்ய வேண்டும் என்பதை உனக்குத் தெளிவாகச் சொல்கிறேன். ஓ மன்னா, அதை உனது மைந்தர்களுடன் கேள். அப்படிக் கேட்டுவிட்டு, செயல்படு (தேவையானதை செய்து கொள்). ஓ மன்னா, பாண்டவர்களால் எந்த அச்சமும் ஏற்படாதவாறு நடந்து கொள். நிச்சயமாக, பின்னர் நீ துன்பத்திற்கு ஆளாகாதவாறு, கொள்கைகளின் அறிவியல் {Science of Policy} ஏற்றுக் கொள்ளும் வகையில், செயல்களைச் செய்." என்றார்.

வைசம்பாயனர் தொடர்ந்தார், "குரு குல மன்னன் திருதராஷ்டிரன் சிந்தனையிலாழ்ந்து துக்கத்திலிருக்கும்போது, தன்னாலான அனைத்தையும் சொல்லிவிட்டு கணிகர் தனது வசிப்பிடத்திற்குத் திரும்பினார்.
***சம்பவ பர்வம் முற்றிற்று***
- See more at: http://mahabharatham.arasan.info/2013/07/Mahabharatha-Adiparva-Section142c.html#sthash.uF3A9ngv.dpuf

https://www.google.nl/search?newwindow=1&site=&source=hp&q=கணிகர்&oq=கணிகர்&gs_l=hp.3...2608079.2615859.0.2620126.8.8.0.0.0.0.2558.4569.2j2j1j5-2j9-1.8.0....0...1c.1j4.35.hp..4.4.1493.a6nCt_67e1w

No comments:

Post a Comment