தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 14 பிப்ரவரி, 2014

கணிகர் நீதி - ஆதிபர்வம் பகுதி 142 ஆ !


(சம்பவ பர்வத் தொடர்ச்சி)

வைசம்பாயனர் தொடர்ந்தார், "உனது மகனோ, நண்பனோ, சகோதரனோ, தந்தையோ அல்லது ஆன்மிக குருவாகவே இருந்தாலும் அவர்கள் எதிரியானால், வளமையை விரும்பி எந்த மனவுறுத்தலும் இல்லாமல், அவர்களை நீ கொன்றுவிட வேண்டும். சாபங்கள் மற்றும் மந்திரம் மூலமோ, செல்வத்தைக் கொடையாகக் கொடுத்தோ, விஷமிட்டோ, அல்லது ஏமாற்றியோ, ஒரு எதிரி கொல்லப்பட வேண்டும். அவனை எக்காரணம் கொண்டும் அலட்சியத்தால் புறக்கணித்துவிடக்கூடாது. இரு தரப்பும் சமமாக இருந்து, வெற்றியை நிர்ணயிக்க முடியா சமயத்தில், அக்கறையுடன் விடாமுயற்சியில் ஈடுபடுபவன் வளமை பெறுவான்.
எது செய்யப்பட வேண்டும் எதை செய்யாமல் விட வேண்டும் என்பதை அறியாமல், தீய வழிகளில் செல்வது ஒரு ஆன்மிக குருவே ஆனாலும், அவரும் தண்டிக்கப்பட வேண்டும். நீ கோபத்துடன் இருந்தால், அப்போதும் உனது உதட்டில் புன்னகையுடன் பேசி, நீ கோபமில்லாமல் இருப்பதைப் போல காண்பிக்க வேண்டும். வசை மொழி பேசி உனது கோபத்திற்கான குறிப்பைக் காட்டக்கூடாது. பாரதனே, நீ தாக்குவதற்கு முன்னும், தாக்கும்போதும் கூட மென்மையாகவே பேச வேண்டும்! தாக்குதல் முடிந்ததும், பாதிக்கப்பட்டவனிடம் கருணை காட்டி வருந்து, ஏன் கண்ணீரே விடு. பொருளைக் கொடையாகக் கொடுத்தோ, மென்மையான உனது நடத்தையாலோ எதிரி அமைதியாக இருக்கவைத்து, அவன் நிலை சரியில்லாத போது அவனை அடிக்க வேண்டும். பெரிதும் வெறுக்கத்தக்க குற்றவாளி, அறம்சார்ந்து வாழ்வதைக்கண்டு நீ சிரிக்கலாம், அவன் அணிந்திருக்கும் வேடம் கரு மேகங்கள் மலைகளை மறைப்பதைப் போல அவனது குற்றங்களை மறைத்துவிடும். உன்னால் மரணதண்டனை கொடுக்கப்பட்ட மனிதனின் வீட்டை நீ கொளுத்த வேண்டும். பிச்சைக்காரர்கள், நாத்திகர்கள் மற்றும் கள்ளர்களை உனது நாட்டில் வசிக்க அனுமதிக்கவே கூடாது {And thou shouldst never permit beggars and atheists and thieves to dwell in thy kingdom என்கிறார் கங்குலி.} கேலிப் பேச்சாலோ, விஷத்தாலோ, உணர்ச்சிமிக்கப் போராலோ, கூட்டாளிகளை விலைபேசியோ, செல்வத்தைப் பரிசாகக் கொடுத்தோ, அல்லது உனது பலத்துக்குகந்த எந்த வழியிலாவது உனது எதிரியை அழிக்க  வேண்டும். இந்த விஷயத்தில் நீ பெரும் கொடூரனாக செயல்படலாம். மரண கடி கடிக்க, நீ உனது பற்களைக் கூர்மையாக்க வேண்டும். நீ உனது எதிரியை அடிப்பதால் உண்டாகும் விளைவு, அந்த எதிரி மறுபடி தனது தலையைத் தூக்காதவாறு இருக்க வேண்டும். ஒருவனிடம் பயமே இல்லாவிட்டாலும், நீ எப்போதும் அவனிடமும் பயத்துடன்தான் இருக்க வேண்டும். பயமில்லாதவனிடமே பயம் வேண்டும் என்றால், ஒருவனிடம் பயம் இருந்தால் அதைப்பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை.

முதலாமவன் பலசாலியாக இருப்பின் அவன் உன்னை வேர் வரை அழித்துவிடுவான் (நீ தயார் நிலையில் இல்லாததால்). நன்றியுடன் இல்லாதவர்களை நீ நம்பவே கூடாது. நன்றியுள்ளவர்களையும் நீ நம்பக்கூடாது. உனது நம்பிக்கைக்குரியவர்கள் உனக்கு எதிரியாக மாறினால், நீ நிச்சயமாக அழிந்துவிடுவாய்.  நன்றி மற்றும் நம்பகத்தன்மையை சோதித்துப் பார்த்த பிறகே, அவர்களை உனது நாட்டிலும் மற்றவர்கள் நாட்டிலும் ஒற்றர்களாக நியமிக்க வேண்டும். அன்னிய தேசங்களில் இருக்கும் ஒற்றர்கள் சரியான ஏமாற்றுக்காரர்களாகவும், துறவு கோலம் பூண்டவர்களாகவும் இருக்க வேண்டும். நந்தவனங்களில், கேளிக்கை நடக்கும் இடங்களில், கோவில்கள் மற்றும் மற்ற புனிதமான இடங்களில், தலைமை நீதிபதி இருக்கும் இடத்தில், வாரிசாகும் தகுதி உள்ளவர்கள் இடத்தில், தலைமைத் தளபதி இருக்கும் இடத்தில், குடிக்கும் அரங்கினில் {Drinking Halls என்கிறார் கங்குலி}, தெருக்களில், மற்றும் (பதினெட்டு) தீர்த்தங்களில் (அமைச்சர், தலைமை குரு, வாரிசாகும் தகுதி உள்ளவன், தலைமைத் தளபதி, அரசவை வாயில் காப்போர், உள் அறைகளில் இருக்கும் மனிதர்கள், சிறைக் காவலர், தலைமை நிலமளப்பவர், பொக்கிஷ அதிகாரி, கட்டளைகளை ஏற்று நடத்துபவர், நகர காவல்துறை அதிகாரி, தலைமை கட்டிட வல்லுனர், நீதிபதி, சபை தலைவர், முதன்மை ஆபத்துதவிகள், கானகங்களைக் காப்பவர் ஆகிய பதினெட்டு தீர்த்தர்கள்} வேள்வி நடக்கும் இடங்களில், கிணறுகளின் அருகில், மலைகள் மற்றும் நதிகளில், கானகங்களில் மற்றும் மக்கள் கூடும் அனைத்து இடங்களிலும் ஒற்றர்கள் இருக்க வேண்டும். பேச்சில் தாழ்ச்சியுடனும், இதயம் கத்தியைப் போல் கூர்மையுடனும் இருக்க வேண்டும். கொடுமையான பயங்கரமான செயலைச் செய்து கொண்டிருக்கும்போதும் உதட்டில் புன்னகையோடு இனிமையாகவே பேச வேண்டும். வளமையில் விருப்பம் இருந்தால், நீ பணிவு, உறுதி, அமைதி ஆகியவற்றின் எல்லா கலைகளையும் ஏற்று அனுசரிக்க வேண்டும். உனது தலையை தாழ்த்தி மற்றவர்களின் கால்களை நீ வணங்கினாலும், நம்பிக்கையுடனும் விருப்பத்துடனும் இருக்க வேண்டும். கொள்கைகளின் விதிகளை நன்கு அறிந்த மனிதன், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கனியில்லா மரமாகவே இருப்பான். அப்படியே கனி கொடுத்தாலும் அது தரையில் இருந்து பறிக்க முடியாத உயரத்தில் இருக்கும். அந்தப் பழம் பழுத்திருந்தால் அது பதனிடப்படாததாக {raw} காட்சியளிக்க முயல வேண்டும். இவ்வழியில் தன்னை தகவமைத்துக் கொள்பவன் எக்காலத்திலும் புகழால் மங்கமாட்டான். அறம், பொருள் மற்றும் இன்பம் ஆகியன நன்மையும் தீமையும் கலந்து ஒருங்கே பின்னப்பட்டவையாகும். அதில் நன்மைகளை மற்றும் ஏற்று, தீமை தவிர்க்கப்பட வேண்டும். அறத்தைப் பயில்பவர்கள் பொருளின்மையால் வருத்ததுடன் இருந்து, இன்பத்தை ஏற்க மாட்டார்கள். செல்வத்தை அடைபவர்கள் மற்ற இரண்டையும் ஏற்காமல் மகிழ்ச்சியற்று இருப்பார்கள். இன்பத்தை மட்டுமே அனுபவிப்பவர்கள் அறம் பயிலாததாலும், செல்வம் சம்பாதிக்காததாலும் துன்பப்படுவார்கள். ஆகையால், அறம், பொருள், இன்பம் ஆகியவற்றை நீ துன்பப்படாதவாறு பயில வேண்டும். பொறாமலையற்றிருந்து, அக்கரையுடன் உனது காரியத்தை நிறவேற்ற, நீ அடக்கத்துடனும், கவனத்துடனும், முனைப்புடனும் பிராமரணர்களை கலந்தாலோசிக்க வேண்டும். வீழ்ந்துவிட்டபின், மென்மையாகவும் வலுவாகவோ எவ்வகையிலாவது எழுந்துவிட வேண்டும். அப்படி எழுந்த பின்னர் அறம் பயில வேண்டும். பேரிடர்களால் பாதிக்கப்படாதவர்கள் வளமையாக முடியாது. பேரிடர்களிலிருந்து மீளும் மனிதனின் வாழ்க்கையில் இதை நாம் காணலாம். கவலையால் பாதிக்கப்பட்டவன், பழங்கால மனிதர்களின் (நள தமயந்தி வரலாற்றைப் போன்ற) {மேலும் அரிச்சந்திரன் சந்திரமதி, ராமன் சீதை வரலாறு போன்ற} வரலாறுகளைக் கேட்க வேண்டும். துன்பத்தால் பாதிக்கப்பட்ட இதயம் கொண்டவன், எதிர்கால வளமையை நம்பி சமாதானம் கொள்ள வேண்டும். கல்விகற்ற ஞானமுள்ளவன்  இதுவரை அடைந்த நன்மைகளை நினைத்துப் பார்த்து ஆறுதலடைவான். ஒரு எதிரியிடம் ஒப்பந்தமிட்டபின்,  இனி செய்ய எதுவும் இல்லை என்று நினைத்து வசதியாக இளைப்பாறுபவன், எழுப்பப்படும்போது, மரத்தில் உச்சியில் படுத்துறங்கியவன் விழுவதைப் போல வீழ்வான்.
- See more at: http://mahabharatham.arasan.info/2013/07/Mahabharatha-Adiparva-Section142b.html#sthash.r3HSF8QF.dpuf

https://www.google.nl/search?newwindow=1&site=&source=hp&q=%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D&oq=%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D&gs_l=hp.3...2608079.2615859.0.2620126.8.8.0.0.0.0.2558.4569.2j2j1j5-2j9-1.8.0....0...1c.1j4.35.hp..4.4.1493.a6nCt_67e1w

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக