தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 24 பிப்ரவரி, 2014

மகாபாரதமும் ஈழப்போராட்டமும் வாழ்வியலும்!

இது வெறும் சிறுகுறிப்புத்தான். ஒப்பிட்டுப்பார்த்தால் இன்னும் எத்தனையோ உண்மைகள் புலப்படும்.

கெளரவர்கள் பாண்டவர்கள் எனும் இருபிரினருக்குமிடையில் நடந்த போரில் எத்தனையாயிர் மக்கள் மாண்டார்கள் ஆனால் நடந்த போரோ சகோரங்களின் பிள்ளைகளுக்கு இடையில்தான் நடந்தது. இதை இன்றும் நாம் பார்க்கலாம்.

அண்ணனைத் தம்பியும் தம்பியை அண்ணனும் வெவ்வேறு இயக்கங்களாக நின்று சுட்டுக்கொன்ற சம்பவம் ஈழவரலாற்றில் உள்ளது

இறுதிப்போர் தமிழ்புலிகளுக்கும் சிங்கள இராணுவத்துக்கும் இடையில் நடந்தது. தமிழர்கள் சிங்களவர்கள் உண்மையில் ஒரே இரத்த உறவைக் கொண்ட சகோரர்கள் என்பதை சரித்திரம் சுட்டிக்காட்டுகிறது. இன்றும் பிரச்சனைகள் குடும்ப உறவுகளினுள் தான் இருக்கிறதே தவிர பிரச்சனை என்றும் வெளியில் இருந்து வருவதில்லையே.

மனிதவாழ்வில் புத்தி பலம் ஆயுதம் ஞானம் இருந்தாலும் தர்மமே வழிகாட்ட வேண்டும் என்பதை புத்தி தர்மத்தின் வழிகாட்டலிலேதான் வெற்றி பெறுகிறது. இதே புத்தி தர்மத்தின் பால் இலயித்திருக்கும் தர்மனின் வழிகாட்டலில் பலம்கொண்ட வீமனும் ஆயுதங்களை இயக்கும் வல்லமை கொண்ட அருச்சுணனும் ஞானத்தை தன்பாற்கொண்ட நகுலன் சகாதேவனும் இயங்குகிறார்கள்.

வெறும் நேர்மை மட்டுமல்ல தந்திரமும் தேவை என்பதற்கு கிருஸணர் பாண்டவர்பக்கமும் சகுனி கெளரவர்கள் பக்கமும் செயற்பட்டுள்ளனர். கெறில்லா யுத்தமும் தந்திரோபாயம் கொண்டதே. இந்த கெறில்லா யுத்தவடிவம் மரபுவளி தழுவும் போது முடிபு என்னவானது? கலியுகத்தில் தந்திரம் ஒன்றே வெற்றிக்குரியது என்பதை கலியுகத்துக்கு முந்திய யுகம் சொல்லிச் சென்றுள்ளது.

தர்மம் ஏமாற்றப்படும் தர்மத்தை சூது (சகுன) கவ்வும் என்பதற்கும் மீண்டம் தர்மமே வெல்லும் என்பதற்கும் மகாபாரதம் உதாரணமாகிறது.

நேர்மையான முறையில் வெல்ல முடியாதவன் குறுக்கு வழியில்தான் ஆட்சியைக் கைப்பற்ற முடியும் மகாபாரதம் சொல்லிச் சென்றிருக்கிறது. நேர்மையான தமிழர்களின் போராட்டம் அனைத்தும் தோல்வியை தந்துகொண்டிருந்த போது வெற்றிகளைக் குவிக்கத் தொடங்கியது கெரில்லா யுத்தம். இது ஏன் தோற்றது என்பீர்கள். அதை தோற்கடித்ததும் குறுக்கு மூளைகொண்ட சகுனிகள் என்பதையும் மறக்கலாகாது. எனது போராட்டம் நேர்மையுடன் அனுகப்பட்டதா என்பது கேள்விக்குறியாகத் தொங்கியே நிற்கிறது. பல சத்தியாக்கிரகங்கள் வயிறுமுட்ட உண்டுவிட்டு இடைக்கிடை வெளியில் போய் உணவருந்திவிட்டு வந்திருந்தே நடந்தன. இங்கு தர்மம் சாய்ந்தது. புலிகளின் போரிலும் பல நேர்மை நியாயமற்ற நடவடிக்கைகள் நடந்தன.

மகாபாரதப்போர் நடந்த இடம் எது என்றால் குருசேத்திரம் என்பார்கள். குருசேத்திரம் எங்கிருக்கிறது என்று கேட்டால் ஹரியானாவில் இருக்கிறது என்று கூட தெரிந்து வைத்திருப்பார்கள். ஆனால், குருசேத்திர யுத்தம், ஒரு அறிவியல் தத்துவத்தையும் எடுத்துச்சொல்வது எத்தனை பேருக்கு தெரிந்திருக்கும்! மனம் தான் நம் செயல்களுக்கு காரணமாக அமைகிறது என்பது அறிவியல் கலந்த ஆன்மிக உண்மை.

ஒவ்வொரு நாளும் நமக்குள்ளும் குருசேத்திர யுத்தம் நடந்து கொண்டு தான் இருக்கிறது. மனசு தான் குருசேத்திரம். அதில் இருக்கும் நல்ல எண்ணமே நியாயத்திற்காகப் போராடும் தர்மர் தலைமையிலான பாண்டவர்கள். தீய எண்ணங்களே அநியாயத்தின் பக்கமிருக்கும் துரியோதனன் தலைமையிலான கவுரவர்கள். ஓயாமல் இருபிரிவுக்கும் போர் நடந்து கொண்டே இருக்கிறது. பாண்டவர்களும், கவுரவர்களும் ஒரே பரம்பரையில் பிறந்த தாயாதிகள்(சகோதரர்கள்). அதேபோல, நல்லதும், கெட்டதும் ஒரே மனதில் உற்பத்தியானவை தான். அர்ஜூனன், தன் சொந்த பந்தத்தினர் மீது அம்பு விட தயங்கியது போல, உலகியல் வாழ்வில் ஈடுபடும் நமது புத்தியும், ஒன்றைச் செய்வதா வேண்டாமா என திண்டாடுகிறது. அப்போது விவேகம் என்னும் கிருஷ்ணர், நம் புத்திக்கு வழிகாட்ட வருகிறார். பாரதப்போரில், விவேகமாக நடந்த கிருஷ்ணர் மூலம் நியாயம் ஜெயித்தது. நம் மனதில் நடக்கும் குரு÷க்ஷத்திர போரிலும் நன்மை ஜெயிக்க, விவேகத்துடன் நடந்து கொள்ள வேண்டியுள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக