தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 11 பிப்ரவரி, 2014

யாருக்கு முதலிடம்?


ஒரு அம்மன் கோயில் திருப்பணிக்கு, நன்கொடை தருவோர் பெயர் கல்வெட்டில் பதிக்கப்படும் என திருப்பணிக்குழுவினர் தெரிவித்தனர். கும்பாபிஷேக விழா நாள் வந்தது. ஐந்து லட்சம் ரூபாய் அளித்த பண்ணையார் தன்னுடைய பெயர் தான் முதலில் இருக்கும் என்ற எண்ணத்தில் ஆவலுடன் கல்வெட்டைப் போய் பார்த்தார். ஆனால், அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவருக்கு இரண்டாம் இடம் தான் கிடைத்திருந்தது. முதல் இடத்தில் இருந்த பெயரை பார்த்ததும் பண்ணையாருக்கு கோபமே வந்து விட்டது. காரணம், அவர் வீட்டு வேலைக்காரனின் பெயர் தான் அது. அப்போது திருப்பணி குழுவினரின் தலைவர், உங்கள் வீட்டு வேலைக்காரன் ஏழை தான். இருந்தாலும், கொடுப்பதில் கர்ணனாகி விட்டான். அவன் கொடுத்த தொகை குறைவு என்றாலும், பெயரை முதலில் இடம்பெறச் செய்ததற்கு காரணம் இருக்கிறது. லட்சம், ஆயிரம் கொடுத்தவர்கள் எல்லாம் தங்களின் செல்வத்தில் ஒரு பகுதியைத் தான் கொடுத்தார்கள். ஆனால், உங்கள் வீட்டு வேலைக்காரனோ தன்னிடமிருந்த மொத்த பணத்தையும், வீட்டையும் கொடுத்து விட்டான். அதன் மதிப்பு, நீங்கள் கொடுத்த ஐந்து லகரங்களை விட குறைவு தான். இருப்பினும், கடவுள் மீதும், கொடுத்த பொருளை தன் உழைப்பின் மூலம் மீண்டும் சம்பாதித்து விடலாம் என்ற நம்பிக்கையுமே, அவன் பெயரை முதலில் போட காரணமாயிற்று, என்றனர். பண்ணையாரால் பதில் பேச முடியவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக