தொலைக்காட்சி!!

Search This Blog

Tuesday, February 11, 2014

இவ்வாறான புகைப்படங்களை தொகுத்து கடவுள்களை அவமானப்படுத்துவதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.


தயவு செய்து யாரும் எவரையும், எந்த மதத்தினரையும் இழிவுபடுத்த வேண்டாம். அவரவருக்கு அவரவரது மார்க்கம். அதை பின்பற்ற அவரவருக்கு உரிமை, சுதந்திரம் இருக்கிறது.

மதத்தின் பேரால் மதம்பிடித்து தங்களை யாரும் அரக்கர்  போல் காட்டிக் கொள்ள வேண்டாம். தயவு செய்து பிறமதங்களையும் மதிக்க கற்றுக் கொள்வோம் மதியாதவனை மிதிக்கக் கற்றுக் கொள்வோம்.

இவ்வாறான புகைப்படங்களை தொகுத்து  கடவுள்களை அவமானப்படுத்துவதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.

Luxan Selvarajah எல்லா மதங்களுமே மனிதனை நல்வழி படுத்துவதர்க்காக்த்தான் என்று நம்பு கிறோம்.ஆனால் கொஞ்சம் பேர் அடுத்த மதத்தை சார்ந்தவர்களை மதம் மாற்றுவதில் சந்தோசப்படுவதிலேயே குறியாக இருக்கிறார்கள்.மதங்கள் எல்லாமே மூட நம்பிக்கையையும்,கதைகளையும் கொண்டது.இதில் ஒவ்வொரு மதமும் அது சார்ந்த இடம் ,அவர்களின் கலாச் சாரத்தையும் பிரதி பலிக்கிறது .மற்றபடி மத நூல்கள் எல்லாவற்றிலுமே கதா நாயகன் (கடவுள்)நல்லவராகவே இருக்கிறார்.தீங்கு விளைவிப்பவர்,வில்லன் (சனி)யாகவும் சித்தரிக்கப் படுகிறார்.தவறு செய்கிறவர் கடவுளால் தண்டிக்கப் படுவாரென்றும்,ஸ்வர்கம்,நரகம் அவர்கள் செய்த தப்புக் கேற்றவாறு கொடுக்கப் படும் என்றும் உள்ளது. எந்த ஒரு நூலிலும் உலகம் எவ்வாறு தோன்றியது,மனிதன் எவ்வாறு தோன்றினான் என்பதற்கோ சரியான செய்திகல் சொல்ல படவில்லை.இயற்க்கை மனிதனை படைத்தது மனிதன் கடவுள்களை படைத்தான்.என்பது எல்லோருக்குமே நமக்கு எல்லோருமே தெரிந்ததுதான். அப்படி இருந்த பின்னும் மக்கள் மதத்தின் பிடியில் சிக்குண்டு ஒருவருக்கொருவர் பிரிவினையால் கலவரங்களையும் ,வெறுப்பையும் ஏற்ப்படுத்தி வாழ்ந்து வருகிறோம்.எனவேதான் எந்த மதத்தையும் சாராதவர்களுக்கு எல்லா மதமும் ஒன்றாகவே தெரிகிறது. என்று மதங்களை விட்டு வெளியே வருகிறோமோ அன்றுதான் உலக மக்கள் சந்தோசமாக வாழ முடியும் என்பது நிதர்சனமான உண்மை


No comments:

Post a Comment