ஒரு விடுதலை வீரன் மரணிப்பதில்லை,அவன் அந்த தேசத்தை நேசிக்கும் ஆயிரம் ஆயிரம் தேசபக்தர்களின் இதயங்களில் என்றும் வாழ்ந்து கொண்டே இருப்பான். அப்படிபட்ட ஒரு விடுதலை வீரர்தான் நேதாஜி.
நேதாஜி என அழைக்கப்படும் அதிரடி விடுதலை வீரர் “நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ்” ஒருவரே ஆவார்.
அவசரக்காரர்-ஆத்திரக்காரர் என்று கூறினார் மகாத்மா காந்தி.
படபடப்பானவர்-பண்படாதவர் என்று கூறினார் ஜவகர்லால் நேரு அவர்கள்.
ஆனால் வரலாறு ஏற்றுக்கொண்டது நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் ஒரு விடுதலை வீரர், கொள்கை வீரர் என்று.
தாய் நாட்டின் விடுதலைக்காக தனது 24 வயதில் ஐ.சி.எஸ் என்ற உத்தியோகத்தை தூக்கி எறி்ந்தார்.
35 வயதில் தனக்கு சொந்தமாக இருந்த கட்டாக் நகரில் தான் பிறந்த மாளிகையை தேசத்திற்காக அர்பணித்தார்.
42 வயதில் தான் தலைமை தாங்கியிருந்த அகில இந்திய காங்கிரஸ் பதவியை தூக்கி எறிந்தார்.
44 வயதில் தன் தேச விடுதலைக்காக தாய் நாட்டை விட்டு பிரிந்து அயல்தேசம் சென்றார்.
இப்படியாக தனது தேசத்தின் விடுதலைக்காக முழுமையாக அர்பணிப்புடன் போராடிய ஒரு விடுதலை வீரன் இவன்.
தேசத்தை விட்டு வெளியேறி இருப்பினும் கொண்ட கொள்கையில் ஒரு உறுதியுடன் அன்றைய உலக ஒழுங்கை நன்கு விளங்கிக் கொண்டு அதனை தனது தேசத்தின் விடுதலைக்காக மாற்றியமைத்த ஒரு அரசியல் தலைவனும் கூட இவன்.
தன் உயிரையே பணயம் வைத்து ஜேர்மனியிலும், ஜப்பானிலும், கிழக்காசிய நாடுகளிலும் அலைந்து திரிந்து ஒரு தற்காலிக சுதந்திர அரசை அமைத்து இந்திய தேசிய இராணுவத்தைத் திரட்டி போரிட்டு உலக வரலாற்றிலேயே ஒரு புதிய சாதனையை அத்தியாயத்தை உருவாக்கிவர் கூட இந்த சுபாஷ் சந்திரபோஸ் அவர்களே.!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக