தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 1 மே, 2013

இந்திய சினிமாவுக்கு நூறு வயது [தமிழ்]


இந்திய சினிமாவுக்கு நூறு வயது [தமிழ்]

உலகப்படங்களை தெரிந்த அளவுக்கு இந்தியப்படங்களை இன்றைய தலைமுறையினர் பார்க்கவில்லை என்கிற வருத்தம் எனக்குண்டு. இந்திய இளம் இயக்குநர்கள் உலகப்படங்களின் தரத்திற்கு நமது படங்கள் வரவேண்டும் என்கிற நோக்கில் 1960 முதல் 1980 வரை பல முயற்சிகளை செய்தனர். அவற்றில் சில படங்கள் உலக அளவில் சில பரிசுகளையும் பெற்றன. அவற்றை மொழிவாரியாக தொகுத்து உங்களுக்கு தருவதற்கு முன்பாகவே நிழல் 2008 ஜூலை இதழில் பதிவு செய்தேன். ஒவ்வொரு இயக்குநர்களுக்கு ஒருபடம் வீதம் தொகுக்கப்பட்டது. அதே இயக்குநரின் மற்ற படங்களையும் தேடுவதற்கு இந்த பட்டியல் உதவலாம்.
01. ஏழை படும் பாடு – ராம்நாத் [1950]
02. பராசக்தி - கிருஷ்ணன்பஞ்சு [1952]
03. ரத்தக்கண்ணீர் - கிருஷ்ணன்பஞ்சு [1954]
04. அந்தநாள் – எஸ்.பாலச்சந்தர் [1954]
05. மளைக்கள்ளன் – ஸ்ரீராமுலு நாயுடு [1954]
06. சிவகெங்கைச்சீமை – கே.சங்கர் [1959]
07. நெஞ்சில் ஓர் ஆலயம் –ஸ்ரீதர் [1962]
08. உன்னைப்போல் ஒருவன் – ஜெயகாந்தன் [1965]
09. பழனி – பீம்சிங் [1965]
10. மறுபிறவி – ராமண்ணா [1973]
11. தாகம் – பாபுந்ந்தன் கோடு [1974]
12. குடிசை – ஜெயபாரதி [1979]
13. பசி – துரை [1979]
14. அவள் அப்படித்தான் – ருத்ரைய்யா [1978]
15. சில நேரங்களில் சில மனிதர்கள் – பீம்சிங் [1978]
16. அக்ரகாரத்தில் கழுதை – ஜான் ஆப்ரஹாம் [1954]
17. 16 வயதினிலே – பாரதிராஜா [1980]
18. உதிரிப்பூக்கள் – மகேந்திரன் [1979]
19. கண் சிவந்தால் மண் சிவக்கும் –ஸ்ரீதர் ராஜன் [1983]
20. ஏழாவது மனிதன் – ஹரிஹரன் [1983]
21. காணிநிலம் – அருண்மொழி [1983]
22. தண்ணீர் தண்ணீர் – கே.பாலச்சந்தர் [1982]
23. ஒரு இந்தியக்கனவு – கோமல் சுவாமிநாதன் [1984]
24. சந்தியா ராகம் – பாலுமகேந்திரா [1990]
25. அவதாரம் – நாசர் [1995]
26. மோகமுள் – ஞானராஜசேகரன் [1995]
27. கருவேலம்பூக்கள் – பூமணி [2000]
28. குட்டி – ஜானகி விஸ்வநாதன் [2001]
29. ஜமீலா [அ] நதிக்கரையிலே – பொன்வண்ணன் [2003]
30. ஒருத்தி – அம்ஷன்குமார் [2003]
31. ஆட்டோகிராப் – சேரன் [2004]
32. காதல் –பாலாஜி சக்திவேல் [2005]
33. ஈ –எஸ்.பி.ஜனநாதன் [2006]
34. பருத்திவீரன் – அமீர் [2007]
35. சுப்ரமணியபுரம் – சசிகுமார் [2008]
36. பூ – சசி [2008]
37. ஆரண்ய காண்டம் – தியாகராஜன் குமாராராஜா [2011]
38. வெண்ணிலா கபடிக்குழு – சுசீந்திரன் [2009]
39. பசங்க – பாண்டிராஜ் [2009]
40. அங்காடித்தெரு – வசந்தபாலன் [2010]
41. ஆடுகளம் – வெற்றிமாறன் [2011]
42. மௌனகுரு – சாந்தகுமார் [2011]
43. மதுபானக்கடை – கமலக்கண்ணன் [2012]
44. அட்டகத்தி – ப.ரஞ்சித் [2012]
45. நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் – பாலாஜி தரணிதரன் [2012]



கமல் போன்றோர் விரும்புவது தமிழ் சினிமா உலகத்தின் தரத்துக்கு வர,நாம் விரும்புவது உலக மக்கள் நமது படத்தை பார்க்கும் அளவுக்கு நமது படங்கள் அமைய,இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன என்கிறீர்களா?கமல் சொல்வது வெற்றி பெரும் உலகப்படங்கள் போல நாமும் நடிப்பது(ஆடை இல்லாமல்,வாய் முத்தம்  போன்றன),நாம் சொல்வது சீனா கலைப்படங்களை(கராத்தே,குங்பூ...போன்ற கலைகளை கொண்டு வெற்றி பெற்ற படங்கள்) உலகே அதிசயமாக பார்ப்பது போன்று நமது சொந்த கலைகளை அவர்கள் பார்க்க ரசிக்க!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக