மருந்துகளை தேடி எதுக்கு அலையனும்?
காய்கறிகளிலேயே இருக்கு எல்லாமும்..
நாம் சாப்பிடும் பல காய்கறிளிலேயே ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. அவற்றை அறிந்து, உகந்தபடி சாப்பிட்டால் நலமாக வாழலாம்.
முருங்கைக்காய் விதைகளை சாப்பிட்டால் மலக்குடலில் சேரும் கிருமிகள் வெளியேறும்.
பீன்ஸ், அவரைக்காய், கீரைகள் உண்பதால் மலச்சிக்கல் வராது.
நார்த்தங்காய் பித்தத்தைத் தணிக்கும்.
மாங்காய் சாப்பிட்டால் தாது பலம் பெறும். மலக்குடல் சுத்தமாகும். பசி அதிகரிக்கும்.
பிடிக்கருணைக் கிழங்கு, புடலங்காய் உண்பதால் மூலத்தை அகற்றலாம்.
அவரைக்காயில் புரதம், இரும்பு, சுண்ணாம்புச் சத்துக்கள் இருப்பதால் நீரிழிவு, செரிமாணத் தொல்லை, மலச்சிக்கல் இருப்பவர்கள் அதிகம் சாப்பிடலாம். இரவில் சாப்பிட வேண்டாம்.
மூல நோய் வராமல் தடுக்கும் ஆற்றல் அத்திக்காயில் உள்ளது.
பூசணி, முள்ளங்கியில் நீர்ச்சத்து நிறைந்திருப்பதால் நீர் பிரிந்து பசியைத் தூண்டும்.
கோவைக்காயை சாப்பிட்டால் வாய்ப்புண், வயிற்றுப் புண், நாக்குக் கொப்புளம் சரியாகும்.
அதேப்போல, முட்டைக்கோஸ், அகத்திக்கீரை வாய்ப்புண், குடல் புண்களை ஆற்றும்.
வாழைத்தண்டு சிறுநீர்ப் பாதையில் இருக்கும் கல்லைக் கரைக்கும்.
வெந்தயக் கீரை எலும்பு தேய்மானத்தைத் தடுக்கும்.
சிறிய வெங்காயம் உடல் சூட்டைத் தணிக்கும்.
சுண்டைக்காயை குழந்தைகளுக்குக் கொடுத்தால் வயிற்றில் பூச்சி சேராது. மூச்சுத் திணறல் குறையும்.
காரட் சாப்பிட்டு வந்தால், உடல் பருமனாகாமல் காக்கும். கண் பார்வைக்கு உகந்தது.
பீன்ஸ் சாப்பிட்டாள் பார்வை தெளிவு கிடைக்கும். சருமம் நன்றாக இருக்கும். பித்தம் குறையும்.
காலிஃபிளவர் புற்றுநோயாளிகளுக்கு ஏற்ற உணவாகும். எதிர்ப்புச் சக்தியை அளித்து புற்றுநோய் வளர்ச்சியை குறைக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக