எதிரொலி.
ஒரு தந்தையும் மகனும் மலை மீது ஏறி கொண்டிருந்தார்கள்.அப்போது மகன் கால் தவறி ஒரு குகையில் விழ பார்த்தான்.அப்போது ’ஆ’ என்று சப்தம் போட்டான்,அவனுக்கு ’ஆ’ என்ற சத்தம் திரும்பவும் கேட்டது.
அவனுக்கு ஆச்சரியமாய் இருந்தது,’யார் நீ’ என்று கத்தினான்,சிறிது நேரம் கழித்து ‘யார் நீ’ என்ற சத்தம் கேட்டது.
’நீ ஒரு முட்டாள்’ என்று கத்தினான், ‘நீ ஒரு முட்டாள்’ என்ற சப்தம் திரும்பவும் கேட்டது.மகன் கோபமுடன் தன் தந்தையிடம் என்னப்பா நடக்குது என்று கேட்டான்.
கொஞ்சம் பொறு! என்று சொல்லிவிட்டு ‘நீ ஒரு அறிவாளி’ என்று கத்தினார்,பதிலுக்கு ‘நீ ஒரு அறிவாளி’என்ற சப்தம் திரும்ப ஒலித்தது.
மகனே மக்கள் இதை தான் ’எதிரொலி’ என்று சொல்கிறார்கள்,ஆனால் இது தான் நம் வாழ்க்கை.நீ எதை சொல்கிறாயோ,செய்கிறாயோ அதுவே உன் வாழ்கையில் எதிரொலிக்கும்.
நமது வாழ்கை எதிரொலி போன்றது நாம் என்ன செய்கிறோமா அதுவே நமக்கும் திரும்ப நடக்கும்.நீ ஒருவரிடம் அளவு கடந்த அன்பை வைத்திருந்தால் உனக்கும் அன்பே கிடைக்கும்.
நல்லதே நினையுங்கள்,நல்லதே செய்யுங்கள்,அதுவே உங்கள் வாழ்விலும் எதிரொலிக்கும்...
Thanks - Ilayaraja Dentist
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக