தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 3 மே, 2013

உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் 10 உலர் பழங்கள்!!!



உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் 10 உலர் பழங்கள்!!!

அனைவருக்கும் ஸ்நாக்ஸ் சாப்பிடும் பழக்கம் நிச்சயம் இருக்கும். அதுவும் ஸ்நாக்ஸ் என்றதுமே முறுக்கு, வடை, சிப்ஸ் போன்றவை தான் ஞாபகத்திற்கு வரும். ஆனால் அத்தகைய உணவுப் பொருட்களை சாப்பிட்டால், உடலில் பல பிரச்சனைகள் தான் வரும். ஏனெனில் அவை அனைத்துமே எண்ணெய் பலகாரங்கள். அதிலும் இவற்றை சாப்பிட்டால், உடல் எடை தான் அதிகரிக்கும். அதிலும் உடல் எடையை குறைக்க விரும்புவோர், இத்தகைய உணவுப் பொருட்களை அறவே தவிர்க்க வேண்டும். அதற்கு மாறாக பழங்கள் அல்லது உலர் பழங்களை சாப்பிட்டால் மிகவும் நல்லது. பழங்களில் நிறைய சத்துக்கள் உள்ளது என்று நன்கு தெரியும். அதேப் போன்றே உலர் பழங்களிலும் சத்துக்கள் உள்ளன. ஏனெனில் உலர் பழங்கள் பழங்களில் இருந்து வந்ததே ஆகும். இவை உடலுக்கு ஆரோக்கியத்தை தருவதோடு, உடல் எடையையும் குறைக்க உதவியாக இருக்கும். குறிப்பாக வேலை செய்யும் போதோ அல்லது ஸ்நாக்ஸ் ஏதேனும் சாப்பிட வேண்டும் என்று நினைக்கும் போதோ, இத்தகைய உலர் பழங்களை சாப்பிட்டால், எனர்ஜி கிடைக்கும். ஆனால் இதை மட்டும் சாப்பிட்டு இருக்க முடியாது. ஏனெனில் இவை பசியை கட்டுப்படுத்தாது. உலர் பழங்களில் அனைவருக்கும் தெரிந்தது உலர் திராட்சை, உலர் ஆப்ரிக்காட், உலர்ந்த அத்திப்பழம் போன்றவை தான். ஆனால் உலர் பழங்களில் இன்னும் நிறைய உள்ளன. அவை அனைத்து சீசன் பழங்கள் என்பதால், அவற்றை உலர் பழங்களாக்கி, வருடம் முழுவதும் சாப்பிடும் படியாக தயாரித்துள்ளனர். சரி, இப்போது அந்த உலர் பழங்களில் வேறு எவையெல்லாம் இருக்கின்றன என்று பார்ப்போமா!!!

உலர் திராட்சை
உலர் திராட்சை இனிப்புடன் இருப்பதோடு, மேலும் இதில் சோடியம் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும், கொழுப்பின்றி இருக்கும்.

அத்திப்பழம்
அத்திப்பழம் பெண்களுக்கு மிகவும் சிறந்தது. ஏனெனில் இதில் இரும்புச்சத்து மற்றும் ஃபோலிக் ஆசிட் அதிகம் நிறைந்துள்ளது. அதிலும் மாதவிடாய் காலங்களில் பெண்கள் அதிகம் சாப்பிட்டால், உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைக்கும்.
தக்காளி
என்ன தக்காளியில் உலர்ந்தது உள்ளதா? ஆம் தக்காளியிலும் உலர்ந்தது உள்ளது. உலர் தக்காளியில் வைட்டமின் சி அதிகம் இருப்பதோடு, நல்ல சுவையும் இருக்கும். மேலும் இதிலும் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் லைகோபைன் அதிகம் உள்ளது.
ப்ளம்ஸ்
உலர்ந்த ப்ளம்ஸை, மல்டி-வைட்டமின் மாத்திரை என்று சொல்லலாம். ஏனெனில் அந்த அளவில் அதில் வைட்டமின்கள் உள்ளது மேலும் இது செரிமான மண்டலத்திற்கு மிகவும் நல்லது.
ஆப்பிள்
ஆப்பிளில் கூட உலர்ந்ததா? புதிதாக உள்ளதா? உண்மை தான் உலர் ஆப்பிளில், சாதாரண ஆப்பிளை விட அதிக அளவில் இரும்புச்சத்து உள்ளது. அதுமட்டுமின்றி, இதில் புற்றுநோயை எதிர்த்து போராடும் பைட்டோ-நியூட்ரியன்ட்டுகளும் உள்ளன.
ப்ளூபெர்ரி
பெர்ரிப் பழங்களில் ஒன்றான ப்ளூபெர்ரியிலும், உலர்ந்து இருக்கிறது. இந்த உலர் ப்ளூபெர்ரியில் வைட்டமின் சி, பி மற்றும் ஏ அதிக அளவில் நிறைந்துள்ளது. இது மைய நரம்பு மண்டலத்தின் சீரான இயக்கத்திற்கு மிகவும் இன்றியமையாத சத்துக்கள் உள்ளடக்கியது.
மாம்பழங்கள்
கோடையில் மட்டும் கிடைக்கும் மாம்பழத்தை வருடம் முழுவதும் சாப்பிடுவதற்கு தான் உலர் மாம்பழங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த உலர் மாம்பழங்களில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட், வைட்டமின் ஏ, சி மற்றும் ஈ போன்றவை உள்ளன. அதுமட்டுமின்றி இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்களும் அதிகம் உள்ளன.
ஆப்ரிக்காட்
இதிலும் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. அதவும் இது டயட்டில் இருப்போருக்கு மிகவும் சிறந்த ஸ்நாக்ஸ்.
செர்ரி
உலர்ந்த செர்ரி பழத்திலும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் சி அதிகமாக நிறைந்துள்ளது. மேலும் இது டெசர்ட் உணவுகளில் டாப்பிங்கிற்கு ஏற்றதும் கூட.
குருதிநெல்லி (Cranberry)
குருதிநெல்லியில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருக்கும். அதேப் போன்று உலர்ந்த குருதிநெல்லியை அதிகம் சாப்பிட்டாலும், நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அதிலும் சிறுநீர் தொற்று அல்லது இருமல் மற்றும் சளி இருப்பவர்கள் சாப்பிடுவது மிகவும் நல்லது.
 — with கலை செல்வி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக