தொலைக்காட்சி!!

Search This Blog

Friday, June 9, 2017

தாங்க முடியாத பல் வலியா? காலையில் எழுந்தவுடன் பல் துலக்காதீர்கள்!!

வெங்காயமானது உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அளித்து நச்சுக் கிருமிகளை அழிக்க உதவுகிறது.
இது போன்ற பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ள வெங்காயத்தை நமது பற்களின் அடியில் வைத்துக் கொள்வதால் கிடைக்கும் நன்மைகளை பற்றி தெரிந்துக் கொள்வோம்.
தீராத பல்வலியை குணப்படுத்தும் அற்புத வழிகள்
ஒரு வெங்காயத்தை மெல்லிசாக வெட்டி, அதை நமது பற்களின் அடியில் கீழ் பகுதியில் வைத்தால், தாங்க முடியாத பல்வலி விரைவில் குறைந்துவிடும்.
பல்வலி ஆரம்பத்தில் இருக்கும் போதே அதனுடைய வலி அதிகரிக்கச் செய்யாமல், பல்வலியை போக்குவதற்கு, அந்த வெங்காயத்தை சாதாரணமாக மென்று வந்தாலே போதும்.
கிராம்பு எண்ணெய் பல்வலியை போக்குவதில் முக்கிய பங்கினை வகிக்கிறது. காட்டன் பஞ்சை 3 சொட்டு கிராம்பு எண்ணெயில் நனைத்து பல்வலி இருக்கும் இடத்தில் தேய்த்து கொடுத்தால், நல்ல நிவாரணம் கிடைக்கும்.
வெங்காயத்தை போன்றே வெள்ளரிக்காய்யை மெல்லிசாக நறுக்கி, அதை பற்களுக்கு அடியில் சிறிது நேரம் வைத்து இருந்தால், தாங்க முடியாத பல்வலி குறைந்துவிடும்.
நமக்கு பல்வலி அதிகமாக இருந்தால், இஞ்சியை சிறிய துண்டாக நறுக்கி, அதை பல்வலி இருக்கும் இடத்தில் வைத்து மென்று வர வேண்டும் இதனால் பல்வலிக்கு உடனடி நிவாரணி கிடைக்கும்.
பல்வலி காரணமாக நமது ஈறுகளில் வீக்கம் ஏற்பட்டிருந்தால், அதற்கு சூடான டீ பேக்கை எடுத்து பல்வலி இருக்கும் இடத்தில் நேரடியாக வைத்து, ஒத்தடம் போன்று கொடுத்து வந்தால், பல்வலி மற்றும் ஈறுகளின் வீக்கத்தை குறைக்கலாம்.
தினமும் நாம் சாப்பிடும் உணவுகள் நமது பற்களின் இடுக்குகளில் சிக்கிக் கொள்வதால், அது கிருமிகளாகி, பற்களில் வலியை ஏற்படுத்துகிறது. எனவே அன்றாடம் நாம் பற்களின் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
காலையில் எழுந்தவுடன் பல் துலக்காதீர்கள்! 
நம் அனைவருமே காலையில் எழுந்தவுடன் பற்களை துலக்குவோம், ஆனால் அப்படி செய்யக்கூடாதாம்.
இதற்கு காரணம் என்னவென்றால் இரவில் தான் கிருமிகளின் தாக்கம் அதிகமாக இருக்கும்.
தினமும் நாம் சாப்பிடும் உணவுப்பொருட்களில்,பற்களில் ஒட்டக்கூடிய இனிப்பு மாவுகள், பிஸ்கட்டுகள், மிட்டாய்கள், சொக்லேட்கள், ஐஸ்கிரீம், குக்கீஸ், கேக், பேக்கரிப் பண்டங்கள் போன்றவற்றில் உள்ள சர்க்கரைப் பொருள் பல் இடுக்குகளில் ஒட்டிக்கொள்ளும்போது வாயில் உள்ள பாக்டீரியாக்கள் இவற்றுடன் வினைபுரிந்து, லாக்டிக் அமிலத்தைச்(Lactic Acid) சுரக்கின்றன.
இந்த அமிலம் எனாமலை(Enamel) அரித்துப் பற்களைச் சிதைக்கிறது. இதன் விளைவால் பற்கள் சொத்தையாகின்றன.
மேலும், பற்கள் மற்றும் ஈறுகளில் வலியும் ஏற்படுகிறது. எனவே, பற்கள் பிரச்சனை எதுவும் ஏற்படாமல் இருப்பதற்கு நீங்கள் காலையில் பற்களை சுத்தம் செய்யாமல் இருந்தாலே போதும்.
காலை எழுந்தது முதல் இரவு தூங்குவது வரை பல்வேறு உணவுகளை உட்கொள்கிறோம். அந்த உணவுகளானது பற்களின் இடுக்களில் போய் ஒட்டிக்கொள்கிறது.
நாம் தூங்கிய ஒரு மணிநேரத்தில் கிருமிகள் நமது பற்களில் புகுந்து பற்களை சொத்தையாக்கும் வேலைகளில் ஈடுபடுகின்றன.
அதாவது, நம்முடைய வாயை ஒருமணி நேரத்திற்கு மேல் மூடியிருந்தால் போதும், கிருமிகள் உட்புகுந்து ஒருவித துர்நாற்றம் அடிக்கும்.
அப்படியிருக்கையில், நாம் இரவு தூங்கிய ஒரு மணி நேரத்திற்குள்ளேயே கிருமிகள், பல்வேறு சேதாரங்களை பற்களில் ஆற்றிவிடும்போது, காலையில் எழுந்து எதற்காக பற்களை சுத்தம் செய்கிறீர்கள்.
எனவே, காலையில் பற்களை சுத்தம் செய்வதை தவிர்த்து, இரவு நேரத்தில் சுத்தம் செய்யுங்கள். இரவு நேரத்தில் நீங்கள் பற்களை சுத்தம் செய்துவிட்டு தூங்க சென்றால் எவ்வித கிருமிகளும் பற்களை அண்டாது.
காலையில், சுடுநீர் அல்லது சுடுநீருடன் கொஞ்சம் உப்பு கலந்து சுத்தம் செய்தால் போதுமானது.
- See more at: http://www.manithan.com/news/20170609127590#sthash.7HP5AZDf.dpuf

No comments:

Post a Comment