தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 12 பிப்ரவரி, 2014

உருத்திராக்க அளவு!!

சைவபூஷண சந்திரிகை
யாழ்ப்பாணத்து மேலைப்புலோலி சைவசித்தாந்த மகாசரபம் நா.கதிரைவேற்பிள்ளை இயற்றியது



உருத்திராக்க அளவு
வெவ்வேறு தானங்களில் தரிக்கப்படும் உருத்திராக்க மாலைகளுக்கு எண்ணளவு, எல்லையளவு என இருவகையளவுண்டு. அவற்றுள் எண்ணளவாவது இன்ன தானங்களுக்கு இத்தனை யெண்ணுள்ள மணிகள் தரிக்க வேண்டுமெனபதாம். அதுவருமாறு:- குடுமியிலே ஒருமணியும், தலையிலே முப்பத்தாறு மணியும், காதுகளிலே ஒவ்வொரு மணி அல்லது அவ்வாறு மணியும், கழுத்திலே முப்பத்திரண்டு மணியும், புயங்களிலே தனித்தனி பதினாறுமணியும், கைகளிலே தனித்தனி பன்னிரண்டு மணியும், மார்பிலே நூற்றெட்டு மணியுங் கொண்டமாலை தரித்தலாம். எல்லையளவாவது இன்ன தானத்திற் றரிக்கும் மாலை யிவ்வளவினதா யிருக்க வேண்டு மென்பது. அது வருமாறு:- கையிற் றரிக்கும் மாலை கைப் பெருமையினதாகவும், சிரமாலை சிரத்தினளவாகவும், மார்பிற் றரிக்கப்படும் மாலை பிடர் முதல் நாபி வகையினதாகவும், அல்லது மார்பு அளவினதாகவுஞ் செய்யப்படுதலாம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக