தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 22 பிப்ரவரி, 2012

நோர்வே ரெலிகொம்மை கதிகலங்கவைக்கும் ஈழத் தமிழர் லியோன் !


லியோன், பாஸ்கரன், மற்றும் ரதீஸ் எனப்படும் 3 தமிழர்களால் நோர்வேயில் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம் லிபரா ரெலிகொம் ஆகும். இதன் ஸ்தாபகர்களில் முக்கியமானவர் லியோன் ஆவார். அவர் நோர்வே நாட்டில் பல வருடங்களாக வசித்துவரும் ஒரு ஈழத் தமிழர் ஆவார். குறைந்த செலவில் இலங்கைக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தக்கூடிய பல ரெலிகொம் நிறுவனங்கள் தற்போது இருக்கிறது. ஆனாலும் அவற்றுள் கணிசமான அளவு முன்னேற்றமடைந்து உலகளாவிய ரீதியில் பல நாடுகளில் காலூன்றியுள்ள ஒரு தமிழர் நிறுவனம் லிபரா ரெலிகொம் ஆகும். இந் நிறுவனம் எவ்வாறு ஆரம்பிக்கப்பட்டது என்பது ஒரு சுவாரஷியமான விடையம் ஆகும்.

(பல வருடங்களுக்கு முன்னர்) லியோன் அவர்கள் நோர்வே நாட்டில் வசித்துவந்தவேளை அவர் இலங்கைக்கு அடிக்கடி தொலைபேசியூடாக பேசுவது வழக்கமாம். அப்போது எல்லாம் இவ்வாறு குறைந்த கட்டணத்தில் பேசும் வசதிகள் இருந்திருக்கவில்லை. நோர்வே நாட்டின் ரெலிகொம் ஊடகவே பேசவேண்டிய நிலை இருந்தது. அவர்கள் இலங்கைக்கு 1 நிமிடத்துக்கு இவ்வளவு கட்டணம் என அறவிடுவது வழக்கம். ஒரு முறை லியோன் அவர்கள் தற்செயலாக பல நிமிடங்கள் இலங்கைக்கு தொலைபேசியூடாக உரையாடிவிட்டார். அவருடைய டெலிபோன் பில் எகிறியுள்ளது. சுமார் 5,000 பிரித்தானியப் பவுண்டுகள் (50,000 ஆயிரம் நோர்வே குரோனர்கள்) இவர் கட்டவேண்டும் என நோர்வே ரெலிகொம் கூறியுள்ளது. அப்போது அந்தக் காசைக் கட்ட அவர் படாத பாடு பட்டுள்ளார். அதன் விளைவாகவே அவர் சற்று மாறுபட்ட விதத்தில் சிந்திக்க ஆரம்பித்துள்ளார்.



அதன் விளைவாகவே அவர் முதலில் நோர்வே நாட்டில் லிபரா என்னும் குறைந்த கட்டண தொலைபேசி ஒன்றை ஆரம்பித்தார். இந் நிறுவனம் நோர்வே நாட்டில் படிப்படியாக வளர்ச்சியடைந்து, பின்னர் பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மன், டென்மார்க் என, பல ஐரோப்பிய நாடுகளை ஆக்கிரமித்தது. கடந்த வருடம் லிபரா ரெலிகொம் சுமார் 10 மில்லியன் பவுண்டுகளுக்கு மேல் லாபம் சம்பாதித்துள்ளது. தமிழர்கள் மட்டுமல்லாது பல வேற்றின மக்கள் நம்பி பாவிக்கும் ஒரு தொலைபேசியாக லிபரா தொலைபேசி அமைந்துள்ளது. துன்பத்தை தந்தவனுக்கே அதனை திருப்பிக்கொடு என்று சொல்லுவார்கள் ! அதுபோல நோர்வே ரெலிகொம்முக்கு தற்போது பெரும், போட்டியாகவும், சிம்மசொப்பனமாகவும் இருப்பது இந்த லிபரா ரெலிகொம் ஆகும்.

அன்று அவர்கள் லியோனை கஷ்டப்படுத்தாமலும், குறைந்த செலவில் இலங்கைக்கு கதைக்கக்கூடிய தொலைபேசிகளை அறிமுகப்படுத்தி இருந்தால், இன்று இப்படி லிபராவோடு போட்டி போடவேண்டிய நிலை நோர்வே ரெலிகொம்முக்கு தோன்றியிருக்காது என்று ஒரு நோர்வே ஊடகம் செய்திவெளியிட்டுள்ளது. கிடைக்கும் பெருந்தொகையான லாபப் பணத்தை அப்படியே வைத்திருந்து சந்ததிகளுக்கு சொத்துச் சேர்க்காமல், அதனைப் பல நல்ல காரியங்களுக்கும் செலவிட்டு வருகின்றனர் லிபரா ரெலிகொம் ஸ்தாபனத்தினர். கீள் கானும் பல வீடமைப்புத் திட்டங்கள் இவர்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. போரினால் பாதிக்கப்பட்ட தயக உறவுகளுக்கு இவர்கள், சொந்தச் செலவில் வீடுகளை அமைத்துக் கொடுப்பது மிகவும் வரவேற்க்கத்தக்க விடையமாகும்.

இந்திய அரசு வீடுகளைக் கட்டிக்கொடுப்பதாகக் கூறி ஏமாற்றி இழுத்தடிப்புச் செய்துவரும் நிலையில், இவர்கள் போன்ற ஈழத் தமிழ் தொழிலதிபர்கள் செய்யும் நல்ல திட்டங்களை தமிழ் மக்கள் ஊக்குவித்து, பாராட்டவேண்டும் !











கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக