தொலைக்காட்சி!!

Search This Blog

Saturday, December 9, 2017

எத்தனையோ பழங்கள் இருந்தும் ஏன் கடவுளுக்கு வாழைப்பழத்தை படைக்கிறோம் தெரியுமா?

கடவுளுக்குப் படைக்க வேண்டுமென்றாலே வாழைப்பழத்தைத் தான் நாம் படைக்கிறோம். இதற்கு பலர், வாழைப்பழம் எல்லா சீசன்களிலும் கிடைக்கக்கூடியது. மேலும் மற்ற பழங்களை விட விலை குறைவு என்றெல்லாம் சொல்வதுண்டு.
ஆனால் அது மட்டுமே உண்மையில்லை. அப்போ வேறென்ன காரணமாக இருக்க முடியும் என தெரிந்துக்கொள்ளுங்கள்.
மா, பலா, கொய்யா என் எந்த பழத்தை எடுத்துக் கொண்டாலும் அவை கொட்டையிலிருந்து முளைக்க ஆரம்பிக்கிறது.
அந்த பழங்களின் கொட்டை மனிதராலோ பறவையோலோ சாப்பிடப்பட்டு தூக்கியெறியப்படுகிறது. அதிலிருந்து கனி முளைத்து செடிகள் உருவாகின்றன.
அது எப்படியானாலும் ஏதோ ஒரு உயிரினத்தின் எச்சில் பட்டபின் உருவாகியது ஆகையால் கடவுளுக்குப் படைக்கப்படும் முதன்மையான கனியாக அது இல்லை.
அதேசமயம் வாழை மரம் கொட்டையிலிருந்து உருவாவதில்லை. அது மற்றொரு வாழைக்குருத்திலிருந்து வேர்விட்டு வளர்கிறது. அதனாலேயே கடவுளுக்குப் படைக்கப்படும் தூய்மையான பழமாக வாழைப்பழம் கருதப்படுகிறது.

No comments:

Post a Comment