தொலைக்காட்சி!!

Search This Blog

Monday, December 4, 2017

வானில் தோன்றிய சிறப்பு சந்திரன்( சூப்பர்மூன்)! இணையத்தில் பரவும் அழகிய புகைப்படங்கள்


நிலவு பூமிக்கு அருகில் தென்படும் நிகழ்வை சூப்பர் மூன், முழு நிலவு மற்றும் புது நிலவு என்று அழைப்பார்கள்.
இந்த சூப்பர் மூன், பௌர்ணமி தின வெளிச்சத்தைவிட 30 சதவீதம் பிரகாசமாகவும், 14 சதவீதம் பெரியதாகவும் தெரியும்.
அந்த வகையில் உலகெங்கும் உள்ள விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் நேற்றிரவு அந்த சூப்பர் மூன் நிலவை கண்டுள்ளனர்.
இதேவேளை 2018ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் திகதியும், 31ஆம் திகதியும் நிலவு பூமிக்கு மிக அருகில் மீண்டும் தோன்றும் என ஆயாவாளர்கள் கூறியுள்ளனர்.
பூமியிலிருந்து நிலவு சராசரியாக 238,900 மைல் தூரமாக காணப்படுகின்றது, எனினும் நேற்று அது பூமியில் இருந்து 222,761 மைல் தூரத்தில் காணப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், நேற்று அமெரிக்காவில் - வாஷிங்டன் பகுதியில் ஒரு விமானம் செல்லும் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை டுவிட்டரில் பதிவேற்றிய நாசா “இன்று சூப்பர்மூன்” என்றும் பதிவிட்டுள்ளது.
மேலும் இந்த சூப்பர்மூனை பார்த்த பலர் அழகிய புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பதிவேற்றியுள்ளனர்.
இதேவேளை இலங்கை உள்ளிட்ட சில நாடுகளில் சுமார் 70 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த வருடம் நவம்பர் மாதம் 14ஆம் திகதி சூப்பர்மூன் தோன்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.http://www.tamilwin.com/special/01/167017

No comments:

Post a Comment