தூக்கமின்மை பிரச்சனை நீண்ட நாட்களாக தொடர்ந்தால் மன அழுத்தம், பதட்டம் போன்ற பல தீவிரமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அத்தகைய பிரச்சனைக்கு அக்குபிரஷர் சிகிச்சையின் மூலம் எளிதில் தீர்வு காணலாம்.
ஷிமியன் புள்ளி(Shimien)
இந்த புள்ளி பாதத்தின் அடிப்பகுதியில் உள்ளது. படத்தில் காட்டப்பட்டவாறு குதிகாலின் முனைப் பகுதியில் 1 நிமிடம் நன்கு அழுத்தம் கொடுக்கும் போது, படுத்தவுடனே உறக்கம் வரும்.நிகுஅன் புள்ளி(Neiguan)
இந்த புள்ளி கையின் மணிக்கட்டுப் பகுதியில் அமைந்துள்ளது. கையின் மணிக்கட்டு பகுதியில், மூன்று விரல் இடைவெளி விட்டு, அவ்விடத்தில் பெருவிரலால் 1 நிமிடம் நன்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.அன்மியன் புள்ளி(Anmien)
இந்த புள்ளி தலையில் காதில் பின்புறத்தில் அமைந்துள்ளது. காதின் பின்புறத்தில் ஆள்காட்டி விரலால் 20 நிமிடம் அழுத்தம் கொடுக்க வேண்டும். அதனால் உடலில் உள்ள அழுத்தம் குறைந்து, விரைவில் உறக்கம் ஏற்படும்.ஷென்மன் புள்ளி(Shenmen)
இந்த புள்ளி கையின் மணிக்கட்டு பகுதிக்கு சற்று மேலேயும், சுண்டுவிரலுக்கு நேர் கீழேயும் அமைந்துள்ளது. இந்த இடத்தில் பெருவிரலால் அழுத்தம் கொடுக்கும் போது, நம் உடலின் ஆற்றல் குறைந்து, விரைவில் ஆழ்ந்த உறக்கம் உண்டாகும்.குறிப்பு
மேல் கூறப்பட்டுள்ளதை தவிர்த்து சீமைச்சாமந்தி டீ, பாதாம் பால், செர்ரி பழத்தின் ஜூஸ், ரெட் ஒயின் ஆகிய ஏதாவது ஒன்றில் தினமும் இரவில் உறங்கும் முன் 1 கப் குடித்து வந்தால் உறக்கம் நன்றாக வரும்.http://news.lankasri.com/medical/03/168101?ref=ls_lis_d
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக