இஸ்ரேல் நாட்டின் தலைநகர் டெல் அவிவ் (Tel Aviv) நகரிலிருந்து 73 கிலோமீட்டர் தூரமும் ஜெருசலேமிலிருந்து 10 கிலோமீட்டர் தூரத்திலும் உள்ளது. பரபரப்பு எதுவும் இல்லாத, மிகவும் அமைதியான நகரம் பெத்லஹேம்.
இங்கு தான் இயேசு கிறிஸ்து 2,000 ஆண்டுகளுக்கு முன்னர் மாட்டுத்தொழுவத்தில், ஏழ்மையான சூழலில் பிறந்தார்.
இயேசு பிறந்த பெத்லஹேம் என்ற எபிரேய சொல்லுக்கு ‘அப்பத்தின் வீடு’ என்று தமிழில் பொருள் கொண்டு அழைக்கப்படுகின்றது.
பெத்லஹேம், கிறிஸ்தவர்கள் மட்டுமல்லாமல் யூதர்களுக்கும் முக்கியமான ஓர் இடம்.
பெத்லஹேமின் நுழைவுவாயிலில் உள்ள ராகேல் கல்லறை யூதர்களுக்குப் புனிதமான இடமாக கருதப்படுகின்றது.
தற்போது இயேசு பிறந்த இடத்தில் ஒரு தேவாலயம் ஒன்று அமைந்துள்ளது அங்கு உயர்ந்த சுவர்களுடன் பழங்காலக் கோட்டையைப்போல காட்சியளிக்கிறது.
அதற்கு முன்பாக விசாலமான திறந்தவெளி, உயர்ந்த சுவர்களுக்கிடையே சிறிய நுழைவுவாயில் இருக்கிறது.
அவர் பிறந்த இடத்தைக் காண வருபவர்கள் தங்களது உடலையும் உள்ளத்தையும் தாழ்த்திக்கொண்டு இயேசுவைப்போல எளிய மனிதர்களாக வர வேண்டும் என்பதற்காகவே நுழைவுவாயில் சிறியதாக அமைக்கப்பட்டிருக்கிறது.
13-ம் நூற்றாண்டு வரை பெரிய அலங்கார வாயிலாகத்தான் இது காணப்பட்டதாம். அப்போது இங்கு ஆட்சிசெய்த அந்நியர்கள், நினைத்தபோதெல்லாம் ஆலயத்துக்குள் நுழைந்தார்களாம். மேலும், அவர்களில் சிலர் குதிரைகள் மீது உட்கார்ந்துகொண்டே ஆலயத்துக்குள் வலம் வந்திருக்கிறார்கள். இவற்றையெல்லாம் தடுப்பதற்காகவே வாயிலைக் குறுக்கி அமைத்திருக்கிறார்கள் என்று கூறப்படுகின்றது.
தலையைக் குனிந்தபடி ஆலயத்துக்குள் நுழைந்தால், அங்கிருக்கும் பெரிய மண்டபம் அதிக வெளிச்சம் இல்லாமல் காணப்படுகிறது.
12 தூண்கள் வீதம் நான்கு வரிசையில் பெரிய ஆலயம் காணப்படுகிறது. அதில் பழங்காலத்து சர விளக்குகள் தொங்கிக்கொண்டிருக்கின்றன.
மைய பீடத்தின் இடதுபுறம் இயேசு கிறிஸ்து பிறந்த குகைக்கான சிறிய வாசல் இருக்கிறது.
10, 12 படிக்கட்டுகள் இறங்கி குகைக்குள் வந்தால் இயேசு பிறந்த இடம் வெள்ளி நட்சத்திரங்களால் அலங்கரிக்கப்பட்டுக் காணப்படுகிறது.
பெத்லகேமில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்பும் சமய முதன்மையும் கொண்ட "இயேசு பிறந்த இடக் கோவில்" (Church of the Nativity) இக்கோவில் ஓர் உலகப் பாரம்பரியக் களம் என்று யுனெசுக்கோவால் அறிவிக்கப்பட்டுள்ளது மற்றும் உலகப் பாரம்பரியக் களக் குழு 2012ஆம் ஆண்டு சூன் மாதம் 29ஆம் நாள் கூட்டத்தில், 36ஆம் அமர்வின்போது இயேசு பிறந்த இடக் கோவில் உலகப் பாரம்பரியக் களம் என்று அறிவித்தது.
உலகிலுள்ள அனைத்து மக்களாலும் கொண்டாடப்படும் இயேசு பாலகன் பிறந்த இடம் அவனுடைய ரூபமான அமைதியை தன்னுள் கொண்டு அமைதியாக உறங்குகின்றார் இயேசு இந்த தேவாலயத்தில்.
http://www.canadamirror.com/special/03/168361?ref=ls_d_canadamirror

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக