தொலைக்காட்சி!!

Search This Blog

Wednesday, December 27, 2017

இரண்டு நிமிடத்தில் டென்ஷனை மறக்கனுமா? அப்போ இத படிங்க..

இயற்கை நமக்கு கொடுத்துள்ள அற்புதமான ஒரு விஷயம் வெட்டி வேர். இது வெட்டிவேர் புல் இனத்தைச் சேர்ந்தது. இது பெரும்பாலும் ஆற்றுப் படுகைகளில் சிறப்பாக வளரும் தன்மை கொண்டது.
இதன் வேரை வெட்டி எடுத்த பின் புல்லையும் வேரையும் வெட்டி நடுவில் உள்ள துண்டை மீண்டும் புதிதாக நட்டு பயிரிடுவதால் வெட்டி வேர் என வழங்கப்படுகிறது.
இந்த வேரில் இருக்கும் மருத்துவ குணங்கள் பற்றி இந்த பகுதியில் பார்க்கலாம் வாங்க..

  • வெட்டிவேர் அதிக வாசம் உடையதாகவும், மருத்துவ தன்மை அதிகம் உள்ளதாகவும் இருக்கிறது.
  • வெட்டி வேர் குளிர்ச்சியைத் தருவதுடன் நல்ல நறு மணத்தையும், உற்சாகத்தையும் தரக்கூடியது.
  • வெட்டிவேர் எண்ணெய்யை கை,கால் பிடிப்புகளுக்குத் தடவி வர நல்ல பலன் கிடைக்கும்.
  • காய்ச்சல் மற்றும் வயிற்றில் ஏற்படும் நோய்களைக் கட்டுப்படுத்தும். நாவறட்சி, தாகம் நீக்குவதுடன் மன மகிழ்ச்சி உண்டாகும்.
  • வெட்டிவேர் ஊறிய நீரை குடித்தால் காய்ச்சல், நீர் எரிச்சல், நீர் கடுப்பு, உடல்சோர்வு, தோல் நோய்கள் மற்றும் மனஅழுத்தம் போன்றவை குறையும்.
  • கோடை காலத்தில் மண்பானை நீரில் வெட்டிவேரை இட்டு குடிப்பது வழக்கம். இது தாகத்தை தணித்து, சோர்வை நீக்கி உற்சாகத்தை அளிக்கும்.
  • வெயில் காலத்தில் உண்டாகும் அதிக வியர்வை மற்றும் அரிப்பிற்கு வெட்டிவேரை நீரில் ஊறவைத்து அரைத்து குளிக்கும் தண்ணீரில் கலந்து குளிக்கலாம்.

No comments:

Post a Comment