தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 9 டிசம்பர், 2017

இந்த ராசிக்காரங்க இதுல ரொம்ப மோசமாம்!... மற்றவர்களே உஷார்


ஒவ்வொரு ராசிக் காரர்களுக்கும் ஒவ்வொரு பொதுவான இயல்பு குணம் இருக்கும். அது தொழில் சார்ந்தும், இல்லறம் சார்ந்தும், உறவுகளில் அவர்கள் ஈடுபடும் விதம், ஒரு சூழலை அவர்கள் கையாளும் முறை, ஒரு செயலின் போது அவர்கள் எப்படி ரியாக்ட் ஆகிறார்கள் என அனைத்திலும் இந்த பொது குணத்தின் தாக்கம் கொஞ்சம் இருக்க தான் செய்யும்.
அந்த வகையில் ஒவ்வொரு ராசிக் காரர்களிடமும், அந்தந்த ராசியின் மூலமாக காணப்படும் ஒரு மோசமான குணாதிசயமாக கருதப்படுவது என்ன? அதனால் அவர்கள் வாழ்க்கை எப்படியானதாக இருக்கும் என்பதை பற்றி தான் இந்த தொகுப்பில் நாம் காணவிருக்கிறோம்....
மேஷம்
மோதல் போக்கு: மக்களிடம் மோதல் போக்குடன் நடந்துக் கொள்வார்கள். அவர்கள் பேசும் போது கூட சில சமயங்களில் அடிதடிக்கு போவது போல இருக்கும். இது இந்த ராசியின் இயல்பாக கருதப்படுகிறது. அதே போல வாக்குவாதம் செய்வதிலும், அடம் பிடிப்பதிலும் கூட இவர்கள் மேலோங்கி காணப்படுவார்கள்.
ரிஷபம்
அடம் பிடித்தல்: அடம் பிடிக்கும் குணம் அதிகமாக இருக்கும். இதை இந்த ராசிக்காரர்களிடம் அதிகமாக காண முடியும். தங்கள் வாழ்வில் தங்களுக்கு எது வேண்டும் என்பதில் தீர்க்கமாக இருப்பார்கள். மற்றவர்கள் இது நல்லது தான், வாழ்வை மேம்பட உதவும் என்று கூறினாலும் கூட அதை காதில் வாங்கிக் கொள்ள மாட்டார்கள். சில செயல்களில் பிடித்த வைத்த பிள்ளையார் போல தான் இவர்களது தீர்க்கம் இருக்கு.
மிதுனம்
பேரார்வம்: மிகுந்த ஆவல் இருக்கும் இவர்களிடம். தாங்கள் செய்யும் செயலை எப்போது நிறுத்த வேண்டும் என்று கூட தெரியாது. இதனால் கூட இவர்களிடம் இருந்து சிலவன கைமீறி சென்றுவிடும். தங்களுக்கான பாதையை சரியாக தேர்வு செய்ய தெரியாது. இதில் இவர்கள் மிகவும் சிரமப்படுவார்கள்.
கடகம்
உணர்வு: தங்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த தெரியாதவர்கள். இவர்களிடம் நம்பிக்கை இருக்காது. இவர்களது உணர்ச்சிகள் அளவுக்கு மீறி மேலோங்கும். அது அன்பு, கோபம் எதுவாக இருந்தாலும் சரி. அனைத்திலும் தொட்டதற்கு எல்லாம் கோபப்படுவார்கள்.
சிம்மம்
பொறாமை குணம் அதிகம்: ஈகோ, பொறுமையின்மை, அனைத்திற்கும் மேல், அவர்கள் மட்டும் எப்படி அப்படி இருக்கிறார்கள் என்ற எண்ணம் போன்ற பொறாமல் அதிகமாக காணப்படும். இத்துடன் இருக்கும் அடம் பிடிக்கும் குணம் போன்றவரை இவர்களிடம் மோசமான குணங்கள் ஆகும்.
கன்னி
நேர்மை: இந்த அளவிற்கு நேர்மையாக இருப்பார்களா? என கேள்வி எழும் அளவிற்கு இவர்கள் நேர்மையாக இருப்பார்கள். எல்லாமே கனகட்சிதமாக இருக்க வேண்டும் என்பார்கள். இதையே மற்றவர்களிடமும் எதிர்பார்ப்பார்கள். இதனால், இவர்களிடம் யாராவது எதாவது மாற்றங்கள் ஏற்படுத்திக் கொள்ள கூறினால், அதிகமாக கோபம் வரும். அனைவரையும் மாறியிருக்க கூறும் இவர்கள், தங்களை மாற்றிக் கொள்ள மாட்டார்கள்.
துலாம்
மனம்: தாங்கள் விரும்பும் செயலை சிறப்பாக செய்வதற்கு மனதை ஏற்பாடு செய்துக் கொள்ள நிறைய நேரம் எடுத்துக் கொள்வார்கள். தான் எடுத்த முடிவே சரியா, தவறா என தெரியாமல் தடுமாறுவார்கள். மிக சோம்பேறியான இராசி இது. எதையும் முன்னெடுத்து செல்ல பெரிதும் ஆர்வம் இருக்காது.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் கெட்டப் பழக்கத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. யாராக இருந்தாலும் தங்கள் பேச்சால் மாற்றிவிடும் தன்மை கொண்டுள்ளவர்கள். இருவரை தனக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளும் குணாதிசயங்கள் இருக்கும். இது இவர்களது மோசமான பழக்கம் என்பது யாருக்கும் தெரியாது.
தனுசு
ஓவர்-கான்பிடன்ஸ்: தன்னம்பிக்கை இருக்க வேண்டும். ஆனால், அதுவே தன்னால் மட்டுமே முடியும் என்ற நம்பிக்கை இருக்க கூடாது. இதனால், இவர்களிடம் அக்கறை குறைவாக இருக்கும். அட , நம்மனால முடியாத விஷயமா என கருதி, கோட்டைவிட்டுவிடுவார்கள்.
மகரம்
கூச்சம்: அதிகமாக வெட்கப்படுவார்கள். அனைவரும் இவர்களை அமைதியானவர்கள் என கருதலாம். ஆனால், அதற்கு காரணம் இவர்களது கூச்ச சுபாவம் தான். மேலும், யாருடன் பழகலாம், யாருடன் பழகக் கூடாது என்பது இவர்களுக்கு பெரிய சிக்கல் இருக்கும் இவர்கள் எளிதாக யாரையும் நம்ப மாட்டார்கள்.
கும்பம்
முள்: முள் குணம் கொண்டுள்ளவர்கள். மற்றவரது உணர்ச்சியை கொஞ்சம் குத்தி பார்ப்பார்கள். அடம் மற்றும் தான் என்ற குணம் கொஞ்சம் இருக்கும். இவர்களது பிடிவாத குணம் தான் இவர்களிடம் இருக்கும் மோசமான பண்பு. இவர்களது குணத்தை வைத்து இவர்கள் இப்படிப்பட்டவர் என ஒரு முடிவுக்கு வருவது கடினம்.
மீனம்
நிறைய ஐடியாக்கள் வைத்திருப்பார்கள்: எதையாவது கூறி தங்கள் கடமையை செய்வதில் இருந்து நழுவி விடுவார்கள். அவர்கள் முன்னெடுத்த காரியமாக இருக்கலாம். அல்லது அவர்கள் வேலை செய்து வரும் செயலாக இருக்கலாம். ரிசல்ட் நெகட்டிவாக வரும் என்பதை அறிந்தால் அந்த இடத்தில் இருந்து எஸ்கேப் ஆகிவிடுவார்கள். ஆனால், முன் கோபம் அதிகமாக இருக்கும்.

http://www.manithan.com/astrology/04/152924

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக