தொலைக்காட்சி!!

Search This Blog

Friday, December 1, 2017

பித்தப்பை கற்களை கரைக்க இயற்கை வழி

அன்றாடம் நாம் சாப்பிடக் கூடிய உணவு செரிமானத்திற்கு பித்தப்பையில் உள்ள ஜீரண நீர் பெரிதும் உதவுகிறது.
ஆனால் இந்த பித்தப்பை சுருங்கி விரியமால் இருந்தால் பித்தப் பையில் உண்டாகும் ஜீரண நீர் கற்களாக மாற அதிக வாய்ப்புள்ளது.
அதுவும் ஒருவருடைய பித்தப்பையில் கற்கள் உண்டானால் பசி உணர்வு இல்லாத போது சிறிது சாப்பிட்டாலே அவர்கள் வயிறு வீங்கி விடும்.
அதோடு சாப்பிட்ட உணவு செரிமானம் ஆகாமல் நெஞ்செரிச்சல், புளிச்ச ஏப்பம் போன்ற பல பிரச்சனைகள் தோன்றும்.
பித்தப்பை கற்களை கரைப்பது எப்படி?
தொடர்ந்து 5 நாட்கள் 4 டம்ளர் ஆப்பிள் ஜூஸ் அல்லது 4-5 ஆப்பிள் பழங்களை சாப்பிட்டு வர வேண்டும். இதனால் பித்தப்பையில் உள்ள கற்கள் மிருதுவாகும்.
ஆப்பிள் ஜூஸ் குடித்த 5-வது நாளுக்கு அடுத்து 6-வது நாளில், இரவு 6-8 மணி நேரத்தில் சுடுநீரில் எப்சம் உப்பை கலந்து குடிக்க வேண்டும். இதனால் பித்தப்பை குழாய் திறப்பு எளிதாகும்.
அதன் பின் இரவு 10 மணிக்கு 1/2 கோப்பை ஆலிவ் ஆயில் அல்லது எள்ளு எண்ணெயை எலுமிச்சை சாறுடன் அம அளவு கலந்து குடிக்க வேண்டும். இதனால் பித்தப்பை குழாய் வழியே, கற்கள் எளிதில் வெளியேறும்.
ஆனால் அன்றைய தினத்தில், இரவு நேரம் மட்டும் உணவை தவிர்க்க வேண்டும். இம்முறை மூலம் மறுநாள் காலையில் இயற்கை உபாதை வழியாக பச்சை நிற பித்தப்பை கற்கள் வெளியேறுவதை காணலாம்.

http://news.lankasri.com/medical/03/166403

No comments:

Post a Comment