தொலைக்காட்சி!!

Search This Blog

Monday, December 25, 2017

1000 ஆண்டுகள் புகழ்பெற்றது: எமதர்மனின் ஒரே கோவில் !


தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பேராவூரணி அருகே திருச்சிற்றம்பலம் எனும் ஊரில் எமதர்மன் கோவில் அமைந்துள்ளது.
இந்த ஆலயத்தின் மூலவராக எமதர்மன் இருக்கிறார், இந்த கோவில் 1000 வருடங்களாகவே பராமரிக்கப்பட்டு பூஜைகளும் நடத்தப்பட்டு வருகின்றதாம்.
மன்மதனால் தவம் கலைந்ததால் கோபம் கொண்ட சிவன் ஒரு வேகத்தில் மன்மதனை அழித்தாராம்.
பின் ரதிதேவியின் வேண்டுதலுக்காக இத்தலத்திற்கு அருகிலுள்ள ஒரு இடத்தில் மன்மதனை உயிர்த்தெழச் செய்தாராம்.

அப்போது எமன் தனக்கு அளித்துள்ள அழிக்கும் பணியை செய்ய அனுமதிக்குமாறு வேண்டியதால், அதே இடத்தில் எமனுக்கு ஒரு தலம் அமைத்துக் கொடுத்தாராம். அதுதான் இந்த தலம் என்று வரலாறு கூறுகிறது.
இக்கோவிலில் சுவாமிக்கு அபிஷேகம் செய்து வஸ்திரம் அணிவித்தல் நேர்த்திக்கடனாக பின்பற்றப்படுகிறது.
இந்த கோவிலில் வந்து வழிபட்டால் ஆயுள் நீடிக்கும் என்கிறார்கள். எமதர்மர் நீதிக்கு தர்மர் என்பதால், திருடு போனவர்கள், ஏமாற்றப்பட்டவர்கள் எல்லாம் இங்கு வந்து வேண்டிக் கொண்டு, தங்களின் கோரிக்கையை ஒரு பேப்பரில் எழுதி, அதை எமதர்மன் சன்னதியில் வைத்து வழிபட்டு, சூலத்தில் கட்டி விடுகின்றனர்.

இவ்வாறு செய்த வேண்டுதலின் படி, சில நாட்களில் அவைகள் நிறைவேறிவிடும் ஆச்சர்யங்களும் இங்கு நிகழ்ந்துள்ளதாம்.
சனிக் கிழமைகளில் எமகண்ட நேரங்களில் இந்த கோவிலில் ஆயுள்விருத்தி ஹோமம் நடத்தப்படுகிறது.
இக்கோவிலில் உள்ள எமனின் சிலை முறுக்கிய மீசையுடன், எருமை மீது அமர்ந்தவாறு நீல நிறமுள்ள வஸ்திரம் அணிந்துக் கொண்டு கைகளில் பாசக்கயிறு, ஓலைச்சுவடி, கதை ஆகியவற்றுடன் காட்சி அளிக்கும் இவருக்கு கீழே சித்திரகுப்தரும், எமதூதரும் இருக்கின்றனர்.
ஆடி மாதத்தில் விழாக்கள் நடத்தப்படும் இக்கோவில் விழாவின் போது 10 நாட்களுக்கு எமனுக்கு சிறப்பு அலங்காரத்துடன் பூஜைகள் நடைபெறுமாம். அப்போது எமதர்மன் மிக உக்ரத்துடன் காணப்படுவாராம்.

எமன் வேட்டைக்கு செல்லும் போது அதிக கோபத்துடன் காணப்படுவாராம். இவர் உருவத்தைப் பார்க்கும்போது கண்கள் சிவந்து பெரிதாகி, கோபத்தின் வெளிப்பாடாய் காட்சிதருமாம். அதை குறைக்கவே அருகில் பிள்ளையார் சிலை ஒன்று உள்ளதாம்.
இந்த கோவில் குளத்தில் யாரும் நீராடுவதில்லையாம். ஆனால் அதற்கு காரணம் என்பது புரியாத ஒரு புதிராகவே உள்ளதால் சரியான காரணம் ஒன்றும் இதுவரை தெரியவில்லை.


http://news.lankasri.com/history/03/168310?ref=ls_othn

No comments:

Post a Comment