தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 9 டிசம்பர், 2017

தமிழ் மொழியின் எதிர்காலம் எப்படி இருக்கும்?

‘மெல்லத் தமிழ் இனிச் சாகும் , அந்த மேற்கு மொழிகள் தமிழன் மனதினில்  ஓங்கும்’

அமெரிக்காவின், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமையவிருக்கும் இந்தச் சூழ்நிலையில், தமிழ் மொழியின் எதிர்காலம் எப்படி இருக்கும்? என்று தமிழக பேராசிரியர் ஞானசம்பந்தன் கேட்ட வினாவுக்கு வழங்கியுள்ள பதிலை பார்ப்போம்.

உலகப் புகழ்பெற்ற அமெரிக்க ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில், தென்கிழக்கு ஆசிய கல்வித்துறை சார்பில் செம்மொழிகளுக்கான தனி இருக்கை அமைய இருப்பது என்பது தமிழுக்கு மகுடம் போன்றதாகும்.

‘மெல்லத் தமிழ் இனிச் சாகும் - அந்த மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்’ என்றந்தப் பேதை உரைத்தான்... இப்படிக் கோபம்கொண்டார் பாரதி.
ஓலைச்சுவடி காலத்திலிருந்து இந்தக் கணினிக் காலம் வரையில், அனைத்து ஊடகங்களுக்கும் வசதியானதாக, பொருத்தமானதாக தமிழ் தனது பயணத்தைத் தடங்கல் இல்லாமல் தொடர்கிறது.

உலகம் செம்மொழியாக ஏற்றுக்கொண்ட மொழிகளில் தமிழ் மட்டுமே மக்களால் பேசப்படும், எழுதப்படும் மொழியாக இருக்கிறது.
ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமையும் போது, உலகளாவிய மரியாதை தமிழுக்குக் கிடைக்கும்.

அதேபோல், பல்வேறு நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களும் தமிழின் பக்கம் தமது கவனத்தைத் திருப்பும்.

உலக நாடுகளில் மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள மற்ற மாநிலப் பல்கலைக்கழகங்களிலும் தமிழ் இருக்கைகள் அமைக்க வேண்டும்.
‘வடமாநிலங்களைச் சேர்ந்த மக்கள் ஏதாவது ஒரு தென்னிந்திய மொழியை, குறிப்பாகத் தமிழைப் படிக்க வேண்டும்’ என்று பிரதமர் மோடி ஒருமுறை சொன்னார். அதற்குத் தூண்ட வேண்டும். அதற்கு முன்னதாக, தமிழ்நாட்டுப் பிள்ளைகள் தமிழ் படிக்க வேண்டும் என்று பதிலளித்துள்ளார்.

மேற்குறித்த கேள்வி தமிழக சஞ்சிகை ஒன்றில் வெளிவரும் கழுகார் பதில்கள் என்ற பத்தியில் கேட்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Vikatan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக