மாயன் காலண்டர் பற்றி நாம் அனைவரும் அறிந்த ஒரு பரபரப்பான ஒரு விடயமாகும் .2012 ஆண்டு முடியும் போது இந்த உலகம் அழிய போகின்றது என்று பலரை அச்சத்தில் ஆழ்த்தியது இந்த மாயன் காலண்டர்.
மாயர்கள் நாகரிகம் அழிவுற்றாலும் அவர்களின் அறிவு நம்மையே பிரமிக்க வைத்தது நாம் தற்போது பயன்படுத்தப்படும் காலண்டர் அன்று மாயர்களால் உருவாக்கப்பட்ட காலண்டர் ஆகும் அனால் இன்றும் அது இவர்கள் எவ்வாறு உருவாகினார்கள்? எப்படி உருவாக்கப்பட்டது என்று எவரும் அறியாத புதிராக தான் இன்னும் உள்ளது.
மாயன் காலண்டர் 5126 வருடக் கால அளவு கொண்டது. 2012ம் வருடம் டிசம்பர் 21 அன்று இது முடிந்துவிட்டது. உலகம் அன்றோடு முடியப்போகிறது என்பதற்கான எச்சரிக்கை மணி என்று பலர் நினைத்தார்கள், பயந்தார்கள். ஆனால், அந்த பயங்கள் அர்த்தமற்றவை என்று காலம் நிரூபித்துவிட்டது.
மாயன் நாகரிகம் அமெரிக்காவில் வசித்த செவ்விந்தியர்களிடையே நிலவிய நாகரிகம். இந்த நிலப்பகுதிகள் காலத்தின் போக்கால் அரசியல் மாற்றங்களால் இன்று மத்திய அமெரிக்காவில் ஐந்து நாடுகளாக இருக்கின்றன. அவை மெக்ஸிகோ, கௌதமாலா, பெலீஸ், ஹோண்டுராஸ், எல் சால்வடார் ஆகியனவாகும்.
கி.மு. 100 - டேயோட்டிவாக்கன் (Teotihuacan) என்ற நகரம் மாயன் மக்களால் உருவாக்கப்பட்டது.
அமெரிக்காவின் பூர்வ குடிகளில் கட்டிடக் கலையில் மிகச் சிறந்து விளங்கியவர்கள் மாயன்கள் என்று சொல்லப்படுகிறது.
மாயா இனத்தைச் சேர்ந்தவர்கள் வானவியல் சாஸ்திரங்களிலும், கட்டடக் கலையிலும், கணித சூத்திரங்களிலும் கைதேர்ந்தவர்களாக இருந்தனர் என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள் அதற்கு ஒரே சாட்சிதான் மாயன் காலண்டர்.
20 அடிமான எண் முறையை மாயன்கள் பயன்படுத்தினர். மாயன்களின் கணிதத்திறமைக்கு சான்று அவர்களின் பூஜ்ஜியம் பயன்பாட்டு முறையாகும்.
கி.மு 400 இக்காலகட்டத்தில் இவர்களால் நாட்காட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
மிகவும் சிக்கலான, ஆனால் மிகத் துல்லியமாகக் கணிக்கப்பட்ட நாட்காட்டி இது மாயன் நாட்காட்டி 3 வகையானவை
- முதலாவது , சோல்கின் (Tzolkin) எனப்படும் டிவைன் நாட்காட்டி (Divine Calendar),
- இரண்டாவது ஹாப் (Haab) என்று கூறப்படும் சிவில் நாட்காட்டி (Civil Calendar).
- மூன்றாவது லாங் கவுண்ட் (Long Count) என்று கூறப்படும் ஷோல்டுன்’ (Choltun)என்னும் நாட்காட்டி.
நாம் கடைப்பிடிக்கும் கிரிகோரியன் காலண்டர் வருடத்தில் 365 நாட்களைக் கொண்டது. மாயர்களின் காலண்டர்களில் இரண்டு வகை காலண்டர்கள் முக்கியமானவை.
ஒன்று 365 நாட்கள் கொண்டது. வருடத்துக்கு 18 மாதங்கள். மாதத்துக்கு 20 நாட்கள். இந்தக் காலண்டரை ஹாப் காலண்டர் (Haab) என்று அழைத்தார்கள்.
மாதம் 20 நாட்களாக, இந்தக் காலண்டரில் வருடத்துக்கு 360 நாட்கள் வரும். ஆனால், வானியல் முறைப்படி வருடத்துக்கு 365 நாட்கள் வேண்டும் என்று மாயர்கள் தெரிந்து வைத்திருந்தார்கள்.
காலண்டர் வகுத்த 360 போக எஞ்சிய ஐந்து நாட்கள் அதிர்ஷ்டம் இல்லாத நாட்கள் என்று நம்பினார்கள். அந்த நாட்களில், எந்த நல்ல காரியங்களும் செய்யமாட்டார்கள். இந்தக் காலண்டர் சாமானியர்களின் உபயோகத்துக்காக உருவாக்கப்பட்டது.
கி. மு. 550 – இல் இந்தக் காலண்டர் முறை நடைமுறைக்கு வந்திருக்கலாம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
அடுத்த வகை காலண்டர் வருடம் 260 நாட்கள் கொண்டது. ஒவ்வொரு வருடத்துக்கும் 13 மாதங்கள், மாதங்களுக்கு 20 நாட்கள். இந்தக் காலண்டருக்கு இஸால்கின் (Isalkin) என்று பெயரிட்டார்கள். இது புனிதக் காலண்டர் என அழைக்கப்பட்டது.
நாம் ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி என கிரகங்களின் பெயரில் கிழமைகளுக்குப் பெயர் வைத்திருக்கிறோம். மாயர்கள் இதே முறையில், தங்களுடைய மாதத்தின் இருபது நாட்களுக்கும் ஒவ்வொரு கடவுள் பெயர் சூட்டினார்கள்.
ஹாப், இஸால்கின் ஆகிய இரண்டு காலண்டர்களும் 52 வருடங்களுக்கு ஒரு முறை இணையும். இந்த இணைப்பு நடக்கும்போது, அதாவது 52 வருடங்களுக்கு ஒரு முறை உலகில் மாபெரும் மாற்றங்கள் ஏற்படும் என்று மாயர்கள் நம்பினார்கள்.
நாட்காட்டி முடிவடைந்ததே தவிர 2012 ல் உலகம் அழியும் என்று மாயன் இனம் எங்கும் சொல்லவில்லை. அவர்கள் தங்களின் இனத்தின் அழிவைப் பற்றியே கூடச் சொல்லவில்லை. அது அவர்களின் கணக்குபடியான யுக மாற்றத்திற்க்காகவே இருக்கும் என ஆய்வளார்களின் கணிப்பு ஆகும்.
http://www.canadamirror.com/special/03/167225
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக