தொலைக்காட்சி!!

Search This Blog

Friday, December 22, 2017

வீட்டில் செல்வம் கொட்ட வேண்டுமா? இதில் ஒன்றை பாலோ பண்ணுங்க

நம் வீட்டில் உள்ள பணக் கஷ்டங்கள், கடன் தொல்லைகள் நீங்கி செல்வம் கொட்ட வேண்டும் என்றால் அதற்கு தினமும் ஒருசிலவற்றை முறையாக கடைபிடிக்க வேண்டும்.
அப்படி என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை இங்கு காணலாம்.
செல்வம் பெருக என்ன செய்யலாம்?
 • வீட்டில் வெள்ளை புறாக்களை வளர்த்து வந்தால் பணத்தட்டுப்பாடுகள் நீங்கும்.
 • வீட்டின் சமையல் அறையில் பல வித ஊறுகாய்களை வைத்திருக்க வேண்டும். அதனால் பணம் அதிகரிக்கும்.
 • அமாவாசை அன்று வீட்டு வாசலில் கோலம் போடக் கூடாது. தலைக்கு எண்ணெய் தடவக் கூடாது.
 • காலையில் பூஜைகள் செய்யாமல், பிதுர்க்களை மட்டும் வழிபட பண வரவு அதிகமாகும்.
 • பசுவின் கோமியத்தில் தினமும் சிறிதளவு குளிக்கும் நீரில் கலந்து குளித்து, அதை வீட்டில் தெளிக்க வேண்டும்.
 • முழு பாசி பருப்பை வெல்லம் கலந்த நீரில் ஊற வைத்து பின் அதனை மறுநாள் பறவை மற்றும் பசுவிற்கு தொடர்ந்து அளிக்க வேண்டும்.
 • பாசிப்பருப்பை ஒரு பச்சை பையில் மூட்டையாக கட்டி தலையடியில் வைத்து உறங்கி மறுநாள் அதனை ஒருபிளாஸ்டிக் பையில் கொட்டி மூடி ஓடும் நீரில் விட பணப்பிரச்சனை தீரும்.
 • தினசரி குளிக்கும் முன் பசுவின் தயிரை உடல் முழுவதும் தடவி சிறிது நேரம் சென்று குளிக்க தரித்திரம் விலகும்.
 • குடியிருக்கும் வீட்டில் வடகிழக்கு பகுதியில் கிணறு,நெல்லி மரம், வில்வ மரம் இருக்க அந்த வீட்டில் லெட்சுமி கடாட்சம் ஏற்படும்.
 • வெள்ளிக் கிழமை மாலை நேரத்தில் பசுவிற்குஉணவளிக்க செல்வம் சேரும்.
 • மஞ்சள் நீருடன், வாசனை திரவியம் கலந்து வீட்டிலும்,தொழில் ஸ்தாபனத்திலும் தெளிக்க ஐஸ்வர்யம் பெருகும்.
 • ஆந்தை, ஒரு ஜோடி கழுதை, ஓடும் வெள்ளை குதிரை ஆகியவற்றின் படத்தை அடிக்கடி பார்த்து வர பண வரவு அதிகரிக்கும்.

No comments:

Post a Comment