தொலைக்காட்சி!!

Search This Blog

Friday, December 1, 2017

பெண்களின் பிறந்த மாதம்: குணாதிசயம் இப்படி தான் இருக்குமாம்


ஜோதிடத்தில் எந்தெந்த மாதத்தில் பிறந்த பெண்கள் எப்படிப்பட்ட குணாதிசயங்களை கொண்டிருப்பார்கள் என்பதை தெரிந்துக் கொள்ளலாம்.
ஜனவரி
ஜனவரி மாதம் பிறந்த பெண்கள் பேரார்வம், லட்சியங்கள் நிறைய கொண்டவர்களாக இருப்பார்கள். எந்த ஒரு விடயத்தையும் தீவிரமாக எடுத்துக் கொள்ளும் இவர்கள், தங்கள் உணர்வை வெளிப்படையாக கூற மாட்டார்கள்.
இவர்கள் தங்களை போன்றே இருக்கும் நபர்களுடன் மட்டுமே அதிகம் பழகும் குணம் கொண்டவராக இருப்பார்கள்.
பிப்ரவரி
பிப்ரவரி மாதத்தில் பிறந்த பெண்கள் சற்று ரொமான்டிக்காக இருப்பார்கள். ஆனால் இவர்களிடம் பொறுமையுடன் பழக வேண்டும். ஏனெனில் இவர்களின் மனநிலை அடிக்கடி மாறுவதால், அனைவராலும் இவர்களை எளிதில் புரிந்துக் கொள்ள முடியாது.
மார்ச்
மார்ச் மாதத்தில் பிறந்த பெண்கள் வலிமை மற்றும் கவர்ச்சியாக காணப்படுவார்கள். அதனால் இவர்கள் அனைவரையும் எளிதில் ஈர்த்து விடுவார்கள்.
மிக நேர்மையாகவும், ஆளுமை செலுத்தும் நபராக திகழும் இவர்கள் அவ்வளவு எளிதாக காதலில் விழுந்து விட மாட்டார்கள்.
ஏப்ரல்
ஏப்ரல் மாதத்தில் பிறந்த பெண்கள் அனைவருடனும் மிக எளிதாக பழகி பேசி விடுவார்கள். ஆனால் சிலர் பொறாமை குணமும் கொண்டிருப்பார்கள். அதனால் இவர்கள் தாங்களை முழுமையாக நம்பிக்கை கொள்பவர்களிடம் மட்டுமே மனம் திறந்து பேசுவார்கள்.
மே
மே மதத்தில் பிறந்த பெண்கள் மிகவும் உறதியான விடாப்பிடியான குணம் கொண்டவர்கள். இவர்கள் நேர்மையாக பழகுவார்கள். ஆனால் இவர்களுக்கென்று தனிக் கோட்பாடுகள் இருக்கும். ஈர்ப்பு மிக்க இவர்களுடன் எளிதாக பழகிவிட முடியாது.
ஜூன்
ஜூன் மாதத்தில் பிறந்த பெண்கள் ஆர்வத்துடன் அனைவருடனும் பேசுவார்கள். கற்பனை திறன் அதிகமாக இருக்கும்.
இவர்கள் மற்றவர் நினைக்கும் முன்பே பேசி முடித்து விடுவார்கள். அதனால் இவர்கள் ஒளிவுமறைவு இன்றி நடந்துக் கொள்வார்கள்.
ஜூலை
ஜூலை மாதத்தில் பிறந்த பெண்கள் நேர்மை, அறிவு, அழகு, மர்மம் கலந்த கலவையாக இருப்பார்கள். இவர்கள் மோதல்கள் ஏற்படாமல் வாழ விரும்புவார்கள்.
அனைவரிடமும் கனிவாக நடந்துக் கொள்ளும் இவர்களை ஏமாற்றி விட்டால், அவர்களுடன் மீண்டும் இணைய மாட்டார்கள்.
ஆகஸ்ட்
ஆகஸ்ட் மாதத்தில் பிறந்த பெண்கள் தனித்துவம் மற்றும் தன்னம்பிக்கை அதிகமாக கொண்டிருப்பவர்கள். இவர்களிடம் நகைச்சுவை உணர்வு அதிகம் இருப்பதால், இவர்கள் இருக்கும் இடத்தில் அனைவராலும் ஈர்க்கப்படுவார்.
செப்டம்பர்
செப்டம்பர் மாதத்தில் பிறந்த பெண்கள் அன்பு, கட்டுப்பாடு, அழகின் கலவை. யாரையும் அவ்வளவு எளிதாக மன்னித்து விட மாட்டார்கள். இவர்களுடன் கவனமாக நடந்துக் கொள்ள வேண்டும்.
இவர்களுக்கு குறுகிய கால உறவுகள் பிடிக்காது. ஒருவருடன் பழகினால் அவருடன் நீண்ட நாள் உறவில் இணைந்திருக்க வேண்டும் என்பதை விரும்புவார்கள்.
அக்டோபர்
அக்டோபர் மாதத்தில் பிறந்த பெண்கள் உணர்ச்சிவசப்பட கூடிய பெண்களாக இருப்பார்கள். அனைவரிடமும் வெளிப்படையாக பேச மாட்டார்கள். இவர்கள் தன் மீது பொறாமை கொள்ளும் நபர்களை கூட வெறுக்க மாட்டார்கள்.
நவம்பர்
நவம்பர் மாதத்தில் பிறந்த பெண்கள் மற்றவர்களை விட ஒருப்படி முன்னே இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். உண்மையை விரும்பும் இவர்கள் பொய்களை வேகமாக கண்டுபிடித்து விடுவார்கள்.
டிசம்பர்
டிசம்பர் மாதத்தில் பிறந்த பெண்களிடம் பொறுமை பெரிதாக இருக்காது. இவர்கள் லக்கியான நபர்கள். ஏனெனில் சூழ்நிலைக்கு ஏற்ப நடந்துக் கொண்டு வெற்றி பெறுவார்கள்.

http://news.lankasri.com/lifestyle/03/166479

No comments:

Post a Comment