தொலைக்காட்சி!!

Search This Blog

Thursday, December 7, 2017

தலைகீழாக விழும் கோபுரத்தின் நிழல்! விடை தெரியாமல் தவிக்கும் விஞ்ஞானிகள்

virupaksha temple
இந்தியாவில் உள்ள பல முக்கிய திருத்தலங்களில் பல விதமான அற்புதங்கள் நிகழ்ந்த வண்ணம் தான் உள்ளன. அந்த வகையில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டிய ஒரு கோவிலின் நிழல் தலை கீழாக விழும் அதிசயம் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு கோவிலில் நிகழ்கிறது. வாருங்கள் இது குறித்து விரிவாக பார்ப்போம்.
virupaksha temple
பெங்களூரில் இருந்து சுமார் 350 கி. மீ தூரத்தில் உள்ள ஹம்பி என்னும் இடத்தில் அமைந்துள்ளது விருபாட்சர் கோயில். ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ள இந்த கோவில் உலக பாரம்பரிய களங்களில் ஒன்றாக உள்ளது.
இந்த கோவிலின் ராஜ கோபுரம் சுமார் 165 அடி உயரம் கொண்டது. இதன் நிழல் ஒரு சுவற்றில் இங்கு தலை கீழாக விழுகிறது. இந்த அதிசய நிழலின் ரகசியம் இன்று வரை புரியாத புதிராகவே உள்ளது. நிழலானது தலைகீழாக விழவேண்டுமானால் அதற்கு கண்ணாடி போன்று ஏதாவது ஒன்று நிச்சயம் தேவை படும். ஆனால் எதுவுமே இல்லாமல் இந்த கோவிலின் நிழல் எப்படி தலை கீழாக விழுகிறது என்பதை எவராலும் அறிய முடியவில்லை.
virupaksha temple inverted shadow
உள்ளூர் மக்கள் இதை இறைவனின் அருள் என்றும், அறிவியலாளர்கள் இதை கட்டிட கலையின் நுணுக்கம் என்றும் கூறுகின்றனர்.மேலும் சில விஞ்ஞானிகள், கோபுரத்திற்க்கும் சுவருக்கும் இடையே ஒரு துளை லென்ஸ் போல செயல்பட்டு கோபுரத்தின் நிழலை தலைகீழாக விழ செய்கிறது என்று கூறுகின்றனர். ஆயினும் எதுவும் 100 சதவிகிதம் நிரூபிக்கப்படவில்லை என்றே கூறப்படுகிறது.
virupaksha temple
இந்த கோவிலில் உள்ள கல்வெட்டுகளை ஆராய்கையில் இதை சாளுக்யா மற்றும் ஹொய்சாலா வம்சத்தினர் கட்டியதாக தெரிகிறது. ஆனாலும் கிருஷ்ணதேவராயர் காலத்திலும் இந்த கோவிலில் பல பணிகள் நடைபெற்றதற்கான ஆதாரங்கள் இருக்கவே செய்கிறது.
virupaksha temple
இந்த கோவிலில் உள்ள மண்டபம் ஒன்றில் 114 தூண்கள் உள்ளன. மற்றொரு மண்டபத்தின் நடுவில் ஒரு வடிகால் கால்வாய் அமைக்கப்பட்டு அதில் துங்கபத்திரா ஆற்றின் நீர் மடப்பள்ளியை அடைந்து பின் வெளிப்பிரகாரம் வழியாக வெளியேறுகிறது.
virupaksha temple
வடிகால் கால்வாய் முதல் வானளாவிய கோபுரம் வரை அனைத்திலும் மிக சிறந்த கட்டிட கலையின் திறன் காண்போரை பிரமிக்கவைக்கிறது. அந்நியர்களின் படையெடுப்பினால் கால மாற்றத்தினாலும் இந்த பகுதியில் இருந்த பல கோவிலிகள் சிதிலமடைந்த போதிலும் இந்த கோவில் மட்டும் காலத்தை கடந்து கம்பீரமாக நின்று நமது நாட்டின் கலாச்சாரத்தையும் கட்டிடக்கலை திறனையும் உலகிற்கு பறைசாற்றுகிறது.

No comments:

Post a Comment