அந்த வகையில் அதிக மருத்துவ சக்தி கொண்ட எலுமிச்சையின் ஒரு துண்டை இரவில் படுக்கும் போது அருகில் வைத்துக் கொண்டு தூங்கினால் நடக்கும் அதிசயங்கள் இதோ!
எலுமிச்சை துண்டுகளை தூங்கும் போது வைத்திருப்பதால் கிடைக்கும் நன்மைகள்
- சிலருக்கு இரவில் தூங்கும் போது மூக்கடைப்பு பிரச்சனைகள் ஏற்படும். அதனால் ஏற்படும் தூக்கமின்மை பிரச்சனையை தடுக்க, இரவில் படுக்கும் போது, ஒரு துண்டு எலுமிச்சையை அருகில் வைத்து தூங்கினால், மூக்கடைப்பு நீங்கி, சுவாசிக்கும் திறன் மேம்படும்.
- எலுமிச்சை காற்றில் உள்ள அசுத்தத்தை உறிஞ்சி, சுத்தமான காற்றை வழங்குவதுடன், தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை உறிஞ்சி, சுத்தமான காற்றினை சுவாசிக்க உதவுகிறது.
- இரவில் படுக்கும் போது அருகில் ஒரு துண்டு எலுமிச்சையை வைத்துக் கொண்டு தூங்கினால், அதிலிருந்து வெளிவரும் நறுமணத்தால் உடல் மற்றும் மனம் அமைதியாகி, மன அழுத்தம் ஏற்படுவது தடுக்கப்படும்.
- எலுமிச்சையில் இருந்து வெளிவரும் நறுமணம் நமது உடம்பில் ரத்த அழுத்தத்தைக் குறைத்து, சீராக்குகிறது. எனவே படுக்கும் போது எலுமிச்சை துண்டுகளை வைத்திருப்பது மிகவும் நல்லது.
- எலுமிச்சை ஒரு நல்ல இயற்கை பூச்சிக்கொல்லியாக பயன்படுகிறது. ஏனெனில் இந்த எலுமிச்சை துண்டை அருகில் வைத்துக் கொண்டு தூங்குவதால், அதிலிருந்து வரும் நறுமணம், பூச்சிகள் நம்மை அண்டாமல் தடுக்கிறது.
- இரவில் படுக்கும் போது ஒரு துண்டு எலுமிச்சையை அருகில் வைத்துக் கொண்டு தூங்கினால், இரவு முழுவதும் அதன் காற்றினை சுவாசித்து, மறுநாள் காலையில் உடல் புத்துணர்ச்சியுடனும், ஆற்றலுடனும் இருப்பதை உணரக்கூடும்.
- எலுமிச்சை பழத்தில் இருந்த வெளிவரும் நறுமணம், மூளையில் செரடோனின் என்னும் ஹார்மோனின் உற்பத்தியை அதிகரித்து, மனநிலையை சந்தோஷமாகவும், நேர்மறையான எண்ணங்களுடனும் இருக்க உதவுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக