தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 4 மார்ச், 2017

கனவில் பாம்பு கொத்தி விட்டதா? இதுதான் பலன்!

நாம் காணும் ஒவ்வொரு கனவிற்கும் நல்லபலன்களும் கெட்டபலன்களும் உள்ளது. இரவில் காணும் கனவுகளுக்கு மட்டுமே பலன் உள்ளது, பகலில் காணும் கனவிற்கு எந்த பலனும் இல்லை.

நற்பலன் தரும் கனவுகள்

  • ஒன்றுக்கு மேற்பட்ட நட்சத்திரங்களை கனவில் கண்டால் பதவி உயர்வு நிச்சயம்.
  • வானவில்லை கனவில் கண்டால் பணம், செல்வாக்கு அதிகரிக்கும். பதவி உயர்வு கிடைக்கும்.
  • கனவில் நிலவினைக் கண்டால் தம்பதிகளிடையே அன்பு பெருகும்.
  • விவசாயிகள் உழுவதைப் போல் கனவு கண்டால், சேமிப்பு பெருகும்.
  • திருமணமாகாதோர் பாம்பு கொத்தியதை போல் கனவு கண்டால், விரைவில் திருமணம் நடைபெறும். திருமணமானவர்க்கு செல்வம் வந்து சேரும்.
  • ஆசிரியர் பாடம் நடத்துவதைப் போல் கனவுக் கண்டால் நாம் நினைத்தது எல்லாம் நிறைவேறும்.
  • இறந்தவர்களின் சடலத்தைக் கனவில் கண்டால் சுபநிகழ்ச்சிகள் நடக்கும்.
  • சிறு குழந்தைகளை கனவில் கண்டால் நோயிலிருந்து விடுதலை கிடைக்கும்.
  • நண்பன் இறந்ததாக கனவு கண்டால் நண்பனின் ஆயுள் கூடும்.
  • தெய்வங்களைக் கனவில் கண்டால் புதையல் கிடைக்கும்.
  • இறந்தவருடன் பேசுவதைப் போல் கனவுக் கண்டால் அதிகாரம், பதவி, லாபம் நிச்சயம் கிடைக்கும்.
  • திருமணக் கோலத்தைக் கனவில் கண்டால், சமூகத்தில் நன்மதிப்பு உயரும்.
  • தற்கொலை செய்து கொள்வதைப் போல் கனவு கண்டால் நெருங்கி வந்த ஆபத்துகள் நீங்கி, நன்மை பிறக்கும்.
  • உயரத்தில் இருந்து விழுவது போல் கனவுக் கண்டால் பணம், பாராட்டு குவியும்.
  • கர்ப்பிணியைக் கனவில் கண்டால் பொருள் வந்து சேரும், நன்மை அதிகரிக்கும்.
  • ஆமை, தவளை, மீன் போன்ற நீர்வாழ் உயிரினங்களை கண்டால் கவலைகள் பறந்து போகும், நிம்மதி பிறக்கும்.
  • மயில், வானம்பாடியை கனவில் கண்டால் தம்பதிகளிடையெ நெருக்கம் அதிகரிக்கும்.
  • கழுதை, குதிரைகளைக் கனவில் கண்டால் வழக்குகள் சாதகமாக அமையும்.
  • மாமிசம் உண்பதைப் போல் கனவுக் கண்டால் பெரிய அதிர்ஷ்டம் அடிக்கும்.
  • வாத்து, குயிலைக் கனவில் கண்டால் நம் முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும்.
  • மலத்தை மிதிப்பது போல் கனவுக் கண்டால் சுபச் செலவுகள் ஏற்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக