தூதுவளையின் இலை, பூ, காய், பழம், வேர் அனைத்தும் மருத்துவ குணம் நிறைந்தவை.
தூதுவளை பூக்கள் உடல் வலிமையை அதிகரிக்க வல்லது. பூக்களை சூப் அல்லது கஷாயமாக செய்து பருகி வர உடல் பலம் கூடும்.
எலும்புருக்கி நோயால் அவதிபடுவோர் தூதுவளை இலையை உணவில் கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
மேலும் இந்த தூதுவளையை சூப் வைத்து குடிப்பதன் மூலம் உடல்வலிமை கிடைக்கும்.
தேவையான பொருட்கள்
தூதுவளை இலை - 2 பிடி
பூ - 2 பிடி
மிளகு, பூண்டு, உப்பு, நெய் - தேவையான அளவு
செய்முறை
• தூதுவளை பூவையும், இலையையும், பூண்டுடன் சேர்த்து இடித்து பின்னர் அதனை வாணலியில் சிறிது நெய் விட்டு பச்சை வாடை போகும் வரை வதக்கவும்.
• அதில் 2 கப் நீர் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.
• அதனை அடுப்பிலிருந்து இறக்கி, வடிகட்டி உப்பு, மிளகு சேர்த்து பருகவும்.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக