தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 16 ஜூலை, 2014

தூக்கம் வரமாட்டேங்குதா? இத ட்ரை பண்ணுங்களேன் !

ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகளுக்கு நாவல் பழம் நல்ல தீர்வாக உள்ளது.
நாவல் மரத்தின் பட்டை, நாவற்பழம், விதை, இலை, வேர் ஆகிய அனைத்துமே மருத்துவகுணம் கொண்டது ஆகும்.
நாவல் பழம் சாப்பிட்டால் நீரிழிவு நோய் கட்டுப்பாட்டில் இருக்கும். கல்லீரல் கோளாறுகள், குடற்புண் போன்றவற்றைப் போக்க வல்லது.
நாவல் பழத்தில் கால்சியம் அதிக அளவில் இருக்கிறது. இந்தப் பழத்தை அடுத்து சீதா பழத்தில்தான் கால்சியம் இருக்கிறது. இது தவிர சோடியம், தாமிரம் ஆகியவை கணிசமான அளவில் உள்ளது.
அதுமட்டுமல்லாது இது வைட்டமின் பி1, பி2, பி6 ஒன்றாக உள்ள அரிதான பழம். இது எவ்வித நோய்களை குணப்படுத்துகிறது என்பதை பற்றி பார்ப்போம்.
நீரிழிவு நோய்:
நாவல் பழச்சாற்றை தினமும் மூன்று வேளை தவறாமல் உட்கொண்டு வந்தால் நீரிழிவு நோயாளியின் சர்க்கரையின் அளவு 15 நாட்களில் பத்து சதவிகிதம் குறைத்துவிடலாம்.மூன்று மாதத்திற்குள் முற்றிலும் கட்டுப்படுத்திவிடலாம்.
மூலநோய்:
மூல நோயின் பாதிப்பு உள்ளவர்கள் நாவல் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், மூல நோயின் தாக்கம் குறையும். நன்கு பழுத்த நாவற்பழத்தை, உப்பு அல்லது சர்க்கரையுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண், குடற்புண் போன்றவை குணமாகும்.
கருப்பை பாதிப்பு:
நாவல் பட்டையை இடித்து நீர் விட்டு கொதிக்கவைத்து வடிகட்டி குடிநீராக அருந்தி வந்தால் நீரிழிவு நோயினால் உண்டான பாதிப்புகள் நீங்கும்.பெண்களுக்கு உண்டாகும் கருப்பைப் பாதிப்புகளைப் போக்கும்.
சரும நோய்:
தூக்கமின்றி அவதிப்படுபவர்கள், நாவல் பழத்தை மதிய உணவுக்குப்பின் சாப்பிட்டு வந்தால், தூக்கமின்மை நீங்கும்.
மெலிந்த உடல் உள்ளவர்கள் தினமும் நாவல் பழத்தைச் சாப்பிட்டு வந்தால் உடல் தேறும்.நாவல்பழம் வியர்வையைப் பெருக்கும். சரும நோய் ஏற்படாமல் பாதுகாக்கும். பித்தத்தைக் குறைக்கும், உடல் சூட்டைத் தணிக்கும்.
மாரடைப்பு:
நாவல் பழத்தினை அளவாக சாப்பிட்டு வந்தால், இவை தமனிகளில் ஏற்படும் பிரச்சனைகளை குறைத்து, மாரடைப்பு வருவதைக் குறைக்கும்.
சிறுநீரக பிரச்சனை:
சிறுநீரக கற்களால் கஷ்டப்படுபவர்கள், நாவல் பழத்தினை சாப்பிடுவதுடன், அதன் விதையை உலர வைத்து பொடி செய்து, தயிருடன் சேர்த்து சாப்பிட்டால் கற்களானது கரைந்துவிடும்.
வயிற்றுபோக்கு:
வயிற்றுப்போக்கினால் அவஸ்தைப்படுபவர்கள், நாவல் பழத்தினை ஜூஸ் போட்டு, அதில் சிறிது கல் உப்பு சேர்த்து கலந்து குடித்து வந்தால், உடனடி நிவாரணம் கிடைக்கும்.
மலச்சிக்கல்:
நாவல் பழத்தினால் செய்யப்பட்ட வினிகரை சரிசமமான நீரில் கலந்து கொண்டு, தினமும் இரண்டு முறை குடியுங்கள். இல்லாவிட்டால் நாவல் பழத்தினை உட்கொள்ளுங்கள்.
நினைவில் வைக்க:
* நாவல் பழங்களை வெறும் வயிற்றில் எடுத்து வர வேண்டாம்.
* நாவல் பழங்களை சாப்பிட்ட உடனே பால் குடிக்க வேண்டாம்.
* முக்கியமாக நாவல் பழங்களை அளவுக்கு அதிகமாக எடுக்க வேண்டாம். இல்லாவிட்டால், அவை உடல் வலி மற்றும் காய்ச்சலுக்கு வழிவகுக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக