தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 3 ஜூலை, 2014

காதல் சின்னத்தின் மர்மங்கள்!

உலக அதிசயங்களில் ஒன்றான இந்தியாவின் தாஜ்மஹால் காதல் சின்னமாய் கூறப்படுகின்றது.
பார்ப்பதற்கு வெள்ளை பளிங்கு கற்களால் கம்பீரமாய் எழுந்து நிற்கும் இந்த சின்னம் பற்றி பல்வேறு மர்மங்களும் உள்ளன.
தாஜ்மஹால் என்பது மன்னர் ஷாஜகானால் தனது மனைவி மும்தாஜின் நினைவாக கட்டப்பட்ட ஒரு காதல் சின்னம் என்பதுதான். ஆனால் பலர் இதை மறுக்கின்றனர்.
ஏனென்றால் மும்தாஜ் மரணத்தை தழுவும்போது இருந்த இடம் தாஜ்மஹால் இருக்கும் ஆக்ரா அல்ல! ஆக்ராவிலிருந்து பல்லாயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால்தான் மும்தாஜ் இறந்திருக்கிறார்.
அவர் இறந்த இடத்திலேயே அவரது உடல் புதைக்கப்பட்டிருக்கிறது. தாஜ்மஹாலில் இருப்பது அவரது பதப்படுத்தப்பட்ட உடலா?... இல்லை... ஏற்கனவே புதைக்கப்பட்ட அவரது உடலின் மீதங்கள் தோண்டியெடுக்கப்பட்டு மீண்டும் தாஜ்மஹாலில் புதைக்கப்பட்டதா என்று பல கேள்விகள் வரலாற்று ஆய்வாளர்களால் எழுப்பப்படுகிறது.
இன்னும் சிலர் ஒரு படி மேலே போய் தாஜ்மஹால் என்பது ஷாஜகானால் கட்டப்பட்டதே அல்ல. அது பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னாலேயே கட்டப்பட்டு ஷாஜகானால் ஆக்கிரமிக்கப்பட்ட சிவன்கோயில் என்றும் சில ஆச்சர்யமிக்க விவாதங்களை எடுத்து வைக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக