தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 4 ஜூலை, 2014

ஆரோக்கிய வாழ்வு தரும் புளி!

உணவுப் பொருட்களுக்கு புளிப்பு சுவையும், நறுமணமும் தருவது தான் புளி.
* புளிப்பு சுவையுடைய புளியம்பழத்தில் என். எஸ்.பி. எனப்படும் நார்ச்சத்துப் பொருள் மிகுதியாக உள்ளது. 100 கிராம் புளி சதைப்பற்றில் 13 சதவீதம் என்.எஸ்.பி. நார்ப்பொருள் உள்ளது. உணவுப் பொருட்களை உப்பி பருக்கச் செய்வதில் என். எஸ்.பி. பங்கெடுக்கும்.
* மலச்சிக்கலை தடுக்கும் ஆற்றலும் என்.எஸ்.பி. நார்ப் பொருளுக்கு உண்டு. புற்றுநோய் மற்றும் பெருங்குடல் சதைகளை பாதிக்கும் நச்சுப் பொருட்களில் இருந்து பாதுகாப்பு அளிக்கும்.
* மூல வியாதியை உருவாக்கும் ஒருவித உப்புப் பொருட்களை கட்டுப்படுத்துவதிலும் என்.எஸ்.பி. பங்கெடுக்கிறது. கெட்ட கொழுப்புக்களையும் இது கட்டுப்படுத்துகிறது.
* எலுமிச்சையில் சிட்ரிக் அமிலம் மிகுந்திருப்ப தைப்போல புளியில் அதிக அளவு டார்டாரிக் அமிலம் உள்ளது. இது உணவுக்கு புளிப்பு சுவையைத் தருகிறது.
மிகச்சிறந்த நோய் எதிர்ப்பு பொருளாகவும் டார்டாரிக் அமிலம் செயலாற்றும். தீங்கு விளைவிக்கும் ஆக்சிஜன் பிரீ-ரேடிக்கல்களிடம் இருந்து உடலை காக்கும்.
* புளியம்பழத்தில் லிமோனென், ஜெரனியால், சபரால், சின்னாமிக் அமிலம், மீதைல் சாலிசிலேட், பைராசின், அல்கைல்தையாசோல் போன்ற துணை ரசாயன பொருட்களும் உள்ளன. இவை பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்டவை.
* அத்தியாவசிய தாதுக்களான தாமிரம், பொட்டாசியம், கால்சியம், இரும்பு, செலினியம், துத்தநாகம் மற்றும் மக்னீசியம் போன்றவையும் புளியில் இருக்கிறது. பொட்டாசியம் இதயத் துடிப்பையும், ரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்த வல் லது. இரும்புத்தாது ரத்த சிவப்பணு உற்பத்தியில் பங்கு வகிக்கும்.
* வைட்டமின் ஏ, போலிக் அமிலம், ரிபோபிளேவின், தயாமின், நியாசின், வைட்டமின்-சி போன்ற வைட்டமின்களும் புளியம் பழத்தில் உள்ளன.
இவை நொதிகளின் செயல்பாட்டிற்கு உதவுபவை. நோய் எதிர்ப்பு பொருட்களாகவும் செயலாற்றும். வளர்ச்சிதை மாற்றத்திலும் பங்கெடுக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக