தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 17 ஜூலை, 2014

4 இறைக்கைகளை கொண்ட பறக்கும் டைனசோர் எச்சங்கள் கண்டு பிடிப்பு: மனிதர் அப்போது உருவாகியே இருக்கவில்லை !


125 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த பறக்கும் டைனோசர் பற்றிய படிமங்கள் சீனாவிலிருந்து மீட்கப்பட்டுள்ளன. இந்த டைனோசர்களுக்கு கால் கை உட்பட உடல் முழுவதும் இறக்கைகள் காணப்பட்டுள்ளன. இதற்கு இரண்டு பாரிய செட்டைகள் காணப்பட்டுள்ளமை படிமங்களிலிருந்து உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சீனாவின் வடகிழக்கு பிராந்தியமான லியோங்கிங் பகுதியில் கடந்த 2012ஆம் ஆண்டு இந்தப் படிமம் மீட்கப்பட்டபோதும் இதனை உறுதிப்படுத்துவதற்கு சிறிது காலம் எடுத்திருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
டைனோசர் குடும்பத்தைச் சேர்ந்த இந்த பறக்கும் டைனோசருக்கு மைக்ரோரப்டர் என்ற பெயர்கொண்டு அழைக்கப்பட்டுள்ளது. இது 4 அடி நீளமானதாகவும் 9 லப்ஸ் எடை கொண்டதாகவும் காணப்பட்டுள்ளது. இதற்கு நீளமான வாலொன்றும் காணப்பட்டுள்ளது. இந்தப் பறக்கும் டைனோசர்கள் மிதமான காலநிலையுடைய காட்டுப் பகுதியில் வாழ்ந்துள்ளது. இதன் இறகுகள் 27 முதல் 30 அடி நீளமானதாகவும் இருந்துள்ளது.
செட்டைகளைக் கொண்ட இந்த டைனோசர்கள் வானில் உயரப் பறந்துள்ளனவா அல்லது மரங்களுக்கு மரம் தாவியுள்ளனவா என்பது இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லையென்கின்றனர் ஆய்வாளர்கள்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக