பிப்ரவரி 17ஆம் தேதி 1600ஆம் ஆண்டு சோகம் தோய்ந்த இரவு. அன்று தான் இத்தாலியின் தலை சிறந்த தத்துவஞானியான புருனோ மதக் கிறுக்கர்களால் எரித்துக் கொல்லப்பட்டார். காம்ப் டீ பியோரி என்ற நாற்சந்தி வாடிகன் நகரிலுள்ளது.
இந்த இடத்தில் புருனோ உயிரோடு துடிக்கத் துடிக்க எரித்துக் கொல்லப்பட்டான். போப்பின் ரோம் நாட்டு நீதிமன்றம் புருனோ ஒரு மத விரோதி; அவன் நாத்திகன் என்று கூறி இந்தக் கடுமையான தண்டனையை அந்த மாவீரனுக்கு வழங்கியது.
அண்டம் நுண்ணிய பல அழிக்க முடியாத அணுக்களால் ஆனது. இதற்கு எல்லைகள் கிடையாது. கண்ணுக்குத் தெரியாத அணுக்கள் வெவ்வேறு புது அணுக்களாக உருவெடுக்கின்றன. பொருளும், அசைவு சக்தியும் அண்டத்தில் இருக்கின்றன என்ற விஞ்ஞான உண்மையை அன்றே கண்டறிந்து கூறினார் புருனோ.
பைபிளை எக்காரணத்தாலும் விஞ்ஞான நூல் என்று கருதமுடியாது. வால் நட்சத்திரங்கள் மனித இனத்தின் மேலுள்ள கோபத்தை வெளிப்படுத்த கடவுளின் ஆயுதங்களில் ஒன்று என்று கூறிய மத குருமார்களின் கருத்து மூடநம்பிக்கை என்று கூறி மக்களிடையே விளக்கினார். இயற்கையின் உண்மைகளை பகுத்தறிவு கொண்டு ஆராய்வதால் ஏற்படுவது தான் உண்மையான அறிவு என்றார் அவர்.
இயேசுநாதரின் உடலும் இரத்தமும் தண்ணீரிலிருந்து உருவாக்கப்பட்டது என்பதும் மோட்சம், நரகம் உண்டு என்பதும் பொய் என்று புருனோ கூறுகிறார். இது கடவுளுக்கு விரோதமானது என்பதுதான் அவர்மேல் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டாகும்.
மன்னிப்புக் கேட்டு கருத்தை மாற்றிக் கொள்ள மறுத்து, இறுதிவரை நாத்திகராக இருந்து, நாத்திக கொள்கை களுக்காக உயிர்த் தியாகம் செய்த புருனோவை நாத்திக உலகம் என்றும் நினைவில் கொண்டிருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக