தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 25 மார்ச், 2014

ஆபத்தான கொமோடோ டிராகன்

கொமோடோ டிராகன் என்பது பல்லி இனத்தை சேர்ந்த ஒரு பிராணி, உலகில் ராட்சத பல்லியினங்கள் 52 உள்ளன, இதில் மிகப்பெரியது கொமோடோ டிராகன் தான்.
இந்தோனேஷியா நாட்டின் தென் கிழக்கு பகுதியான புளோரெஸ், கிலி மோட்டாங், கொமோடோ, ரிங்கா ஆகிய இடங்களில் காணப்படுகிறது.
கொமோடோ பகுதியில் அதிகமாக வாழ்வதால், அதற்கு கொமோடோ என்ற பெயர் வந்துவிட்டது.
தாழ்வான நிலப்பகுதிகளில் மட்டுமே இவைகளை பார்க்க முடியும். எனினும் அபூர்வமாக 2 ஆயிரம் அடி உயரமுள்ள மலைப்பகுதிகளிலும் தென்படுகின்றன.
ஆண் கொமோடோக்கள் அதிகபட்சம் 10 அடி நீளம் வரை வளரும். 250 கிலோ எடை கொண்டதாக இருக்கும்.
பெண் கொமோடோ 7 அடி நீளமும், 25 வருடங்கள் வரை உயிர் வாழ்கின்றன.
மான், காட்டுக் குதிரை, நீர் எருமை, பன்றி போன்றவை விருப்பமான இரையாகும்.
சுறா மீன்களுக்கு பற்கள் எப்படி கூர்மையோ அதே போல் கொமோடோ டிராகனின் பற்கள் ரம்பம் போல் இருக்கிறது, விலங்கை மிக எளிதாக துண்டித்து சாப்பிட்டு விடும்.
கடிக்கும் போது பல் உடைந்து விழுந்து விட்டாலும், அதனால் கொமோடோவிற்கு எவ்வித பாதிப்பும் இல்லை.
ஏனெனில் பல் விழுந்தவுடன் இன்னொரு பல் வேகமாக முளைத்துவிடும். இப்படி வருடத்திற்கு மட்டும் 200 பற்கள் முளைக்கின்றன.
கொமோடோ பற்றி இன்னொரு ருசிகர விடயமும் இருக்கிறது. இதன் வாயில் சுரக்கும் உமிழ்நீர் எதிரி விலங்கு மீது பட்டுவிட்டால் அது இரை விலங்கின் உயிருக்கு ஆபத்தாய் முடிந்து விடும்.
அதே சமயம் ஒரு கொமோடொ இன்னொரு கொமோடோவை கடிக்க நேர்ந்து எச்சில் பரவினால் அதன் மூலம் சக விலங்கிற்கு அது பாதிப்பை ஏற்படுத்துவதில்லை.
தனது எடையை போல் 80 சதவிகித எடையை இது உண்ணக்கூடியது. ஒரு நிமிடத்தில் இரண்டரை கிலோ இரையை மென்று விழுங்கிவிடும்.
நல்ல கொழுத்த ஓர் இரையை வேட்டையாடித் தின்று விட்டால் பத்து நாட்கள் வரை இரையைத் தேடாது.
90 சதவிகிதம் வேட்டையாடித்தான் இரையை உண்ணும். இரை கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டால் தான் இறந்து போன விலங்கின் உடலைத் தேடிச் சென்று உண்ணும்.
இரை விலங்கின் நீர்ச்சத்தையும், இவை உறிஞ்சி குடித்து விடுகின்றன.
இதனால் தான் வறட்சியான காலங்களில் கூட கொமோடோவினால் தண்ணீர் குடிக்காமல் பல வாரங்கள் வரை இருக்க முடியும்.
கனத்த உருவம் கொண்டிருந்தாலும் இவை ஓடுவதில் ரொம்பவும் சுறுசுறுப்பானவை, மணிக்கு 24 கிலோமீற்றர் வேகத்தில் ஓடக்கூடியவை.
ஆசிய நாடுகளில் பாதுகாக்கப்பட்ட முதல் அபூர்வ விலங்காக அறிவிக்கப்பட்டதும் இந்த கொமோடோ விலங்கு தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக