தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 15 மார்ச், 2014

பூச்சியுண்ணும் தாவரங்கள்


ஊனுண்ணித் தாவரம்(Carnivorous plant) என்பது சிறு விலங்குகளையோ அல்லது புரோட்டோசோவாக்களையோ உட்கொள்வதன் மூலம் தங்களுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களைப் பெறும் தாவரம் ஆகும்.
பூச்சியுண்ணும் தாவரங்கள் எனவும் அழைக்கப்படும், இத்தாவரங்கள் பெரும்பாலும் பூச்சிகளையும் கணுக்காலிகளையுமே குறிவைக்கின்றன.
பூச்சிகளைப் பிடிப்பதற்கு இத்தாவரங்கள் சிறப்பான வடிவங்கள் மற்றும் உறுப்புகளைப் பெற்றுள்ளன.
இத்தாவரங்களின் இலைகள் அல்லது இலைகளின் பகுதிகள் இந்த சிறப்பு அமைப்புகளைப் பெற்றுள்ளன.
இவற்றிலிருந்து ஒருவகையான செரிப்பு நீர் சுரந்து பூச்சிகளைச் செரித்துக் கொள்கிறது.
மண்ணில் ஊட்டச்சத்துக்கள்(குறிப்பாக நைட்ரசன்) இல்லாத பகுதிகளிலேயே (சதுப்பு நிலங்களில்) இத்தாவரங்கள் பொதுவாக வளர்கின்றன, எனவே பூச்சிகளின் உடலில் உள்ள புரதத்தில் இருந்து நைட்ரசனை பெறுகின்றன.
வகைகள்
சாடி வடிவச்செடிகள்- Pitfall traps
ஹீலியாம்போரா
பசை காகிதம் போன்ற அமைப்பு- Flypaper traps
பிங்குவிக்குலா
சுண்டெலிக் கூண்டு போன்ற அமைப்பு- Bladder traps
யூட்ரிக்குளோரியா
கொடுக்குச் செடிகள் - Lobster-pot traps
ஜென்லிசியா
இனிப்பான காகிதம் போன்ற அமைப்பு- திரோசிரா
வில்பொறி போன்ற அமைப்பு- டயோனியா
பூச்சியை பிடிக்கும் முறைகள்
இத்தாவரங்கள் பூச்சிகளை பிடிக்க பின்பற்றும் முறைகள் மிக வியப்பானவை, இரையைப் பிடிக்கும் ஐந்து முறைகள் இத்தாவரங்களில் கண்டறியப்பட்டுள்ளன, அவையாவன
1. குழி மூலம் பிடித்தல் - செரிக்க வைக்கும் நொதி அல்லது பக்டீரியா ஆகியவற்றைக் கொண்ட உருண்ட இலைகள் மூலம் பிடித்தல்
2. பசை போன்ற நீர்மத்தை இலையில் கொண்டிருப்பதன் மூலம் இலையின் மீது அமரும் உயிரைப் பிடித்தல்
3. இலைகளை வேகமாக அசைத்துப் பிடித்தல்
4. வெற்றிடத்தை ஏற்படுத்தி இரையை உறிஞ்சிப் பிடித்தல்
5. செரிமான உறுப்புக்கு இரையைச் செலுத்தும் வண்ணம் உள்நோக்கிய முட்களை பயன்படுத்தி பிடித்தல்
http://www.lankasritechnology.com/page.php?carnivorousplant

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக